டெல்லி: இந்திய ராணுவத்தின் "அக்னிபாத்" திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பிகார், உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரா கண்ட், ஜார்க்கண்ட், டெல்லி, தெலங்கான உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்துவருகிறது. இந்த போராட்டங்களின்போது பேருந்துகள், ரயில்கள் மீது கல்வீசுவது போன்ற வன்முறைகள் அரங்கேறுகின்றன.
குறிப்பாக உத்தரப் பிரதேசம், தெலங்கானாவில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. இதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தப் போராட்டங்களினால் நாடு முழுவதும் 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 35 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.
இந்த சேவைகளில் 12303 ஹவுரா - டெல்லி பூர்வா எக்ஸ்பிரஸ், 12353 ஹவுரா - லால்குவான் எக்ஸ்பிரஸ், 18622 ராஞ்சி - பாட்னா பட்லிபுத்ரா எக்ஸ்பிரஸ், 18182 டானாபூர் - டாடா எக்ஸ்பிரஸ், 22387 ஹவுரா - தன்பாத் பிளாக் டயமண்ட் எக்ஸ்பிரஸ், 13512 அசன்சோல் எக்ஸ்பிரஸ், 13512 அசன்சோல் - 13512, ஜாடா30, ஜாடாநகர் எக்ஸ்பிரஸ் நகரம் - கியுல் எக்ஸ்பிரஸ், 12335 மால்டா டவுன் - லோக்மான்ய திலக் (டி) எக்ஸ்பிரஸ், 12273 ஹவுரா-டெல்லி துரந்தோ எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் அடங்கும்.
இதையும் படிங்க: அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு - தீவிரமடையும் போராட்டம்