ETV Bharat / bharat

கொலை மிரட்டல்: சல்மான்கானுக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் - பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, அவர் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

Salman
Salman
author img

By

Published : Aug 1, 2022, 1:42 PM IST

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு அண்மையில் கொலை மிரட்டல் கடிதம் வந்தது. பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவுக்கு ஏற்பட்ட நிலை சல்மான் கானுக்கும், அவரது தந்தைக்கும் ஏற்படும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவை கொலை செய்த கும்பல்தான், சல்மான் கானுக்கும் கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து சல்மான் கானுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

மேலும் மும்பை காவல் ஆணையர் விவேக் பன்சல்கரை சந்தித்த நடிகர் சல்மான்கான், தனது பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் கோரி விண்ணப்பித்தார். இந்நிலையில், சல்மான் கானின் கோரிக்கைப்படி, அவருக்கு துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. தற்காப்புக்காகவே துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:புகை பிடிக்கும் காட்சி : நீதிமன்றத்தில் ஆஜராக தனுசுக்கு விலக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.