மும்பை: முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இன்று ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை தொடர்பு எண்ணிற்கு மிரட்டல் அழைப்பு வந்தது. தொலைபேசியில் பேசியவர் தான் தீவிரவாதி எனவும், முகேஷ் அம்பானி குடும்பத்தை கொலை செய்ய இருப்பதாகவும் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து, மருத்துவமனை சார்பில் டிபி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதுவரை மொத்தம் 8 முறை அழைப்பு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 அன்று முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு வெளியே 20 ஜெலட்டின் குச்சிகள் அடங்கிய கார் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த வாகனத்தில் முகேஷ் அம்பானியை கொல்லப்போவதாக மிரட்டல் கடிதம் ஒன்றும் கிடைத்தது.
இந்த வெடிகுண்டு அச்சுறுத்தல் சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் ஒரு வருடத்திற்குப் பின்னர் தற்போது மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்தியாவில் 5G காத்திருப்பு முடிந்துவிட்டது... பிரதமர் மோடி...