ETV Bharat / bharat

உணவில் எலி மருந்து..பாலியல் தொல்லை அளித்தவரை அடித்து கொன்ற வழக்கில் 5 பேர் கைது - Five Arrested in Vijayawada

ஆந்திராவில் பாலியல் தொல்லை அளித்தவரை எலி மருந்து கலந்த உணவை அளித்து அடித்து கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 1, 2022, 9:24 AM IST

அமராவதி(ஆந்திரா): விஜயவாடா அருகே பயகாபுரத்தில் கடந்த 2021, நவம்பரில் கட்டட ஒப்பந்தகாரர் பீதலா அப்பலராஜு என்பவர் சந்தேகமான முறையில் தலை, முகத்தில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் விசாகப்பட்டினத்தில் வசித்த நிலையில், தொழில் நிமித்தமாக சென்ற இடத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இது கொலையாக இருக்கலாம் என சந்தேகித்தனர்.

இதுகுறித்து அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகள், மொபைல் சிக்னல் ஆகியவற்றை ஆய்வு செய்தும் எந்த துப்பும் கிடைக்காமலிருந்த நிலையில், உயிரிழந்தவரின் உடலின் சில பாகங்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும், உயிரிழந்தவரின் கீழ் வீட்டில் வசித்த சூப்பர்வைசர் சசிகுமார் என்பவரின் குடும்பத்தினரிடையே போலீசார் 10 நாட்கள் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து அவர்கள், தங்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து விசாரணைக்கு அழைப்பதை போலீசார் நிறுத்தினர். இதனிடையே தடயவியல் அறிக்கையில், விஷப் பரிசோதனையால் மரணம் ஏற்பட்டதாகத் தகவல் வந்ததை அடுத்தும், இவ்வழக்கில் சரியான துப்பு கிடைக்காததால், விசாரணையை போலீஸார் ஒதுக்கி வைத்தனர்.

நிறுத்திய விசாரணையை மீண்டும் தொடங்கக் கோரி, உயிரிழந்தவரின் மனைவி போலீசாரிடத்தில் கேட்டுக்கொண்டதன் பேரில் மீண்டும் விசாரணை தூசி தட்டப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே இவ்வழக்கில் சூப்பர்வைசர் சசிகுமார் என்பவரை தீவிரமாக கண்காணித்து வந்த போலீசாருக்கு ஒரு துப்பு கிடைத்தது.

முன்னதாக, தனியாக வசித்த அப்பலராஜுவிற்கு, சுதா ரேவதி என்ற சூப்பர்வைசரின் மனைவி உணவு அளித்து வந்துள்ளார். அபோது இதனிடையே, அப்பலராஜு பாலியல் தொல்லை அளிப்பதாக கணவர், சகோதரரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அப்பலராஜுவை ரவுடி ஷீட்டர் என்பவரின் உதவியால் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாகவே கடந்த ஆண்டு அக்.31 ஆம் தேதி அப்பலராஜுவிற்கு எலி மருந்து கலந்த இரவு உணவை அளித்து பின் அவரை அடித்துக் கொலை செய்துள்ளது போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, நேற்று (அக்.31) இவ்வழக்கில் சுதா ரேவதியின் தாயார் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க: நாட்டின் முதல் வாக்காளரான ஷியாம் ஹிமாச்சல் எலெக்‌ஷனில் நேரில் சென்று வாக்களிக்க முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.