ETV Bharat / bharat

நிழல் உலக தாதா சோட்டா ஷகீலின் கூட்டாளி கைது... 1997 கொலை வழக்கில் கைது.. 25 ஆண்டுகள் தலைமறைவு!

author img

By

Published : Jul 29, 2023, 7:52 PM IST

1997 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 1998ஆம் ஆண்டு ஜாமீன் பெற்று ஏறத்தாழ 25 ஆண்டுகள் தலைமைறைவான மும்பை நிழல் உலக தாதா சோட்டா ஷகீலின் கூட்டாளி லைக் அஹமது ஹூசைன் ஷேக்கை போலீசார் கைது செய்தனர்.

Laik Ahmed Fida Hussain Sheikh
Laik Ahmed Fida Hussain Sheikh

மும்பை : 1997ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் ஜாமீன் பெற்று தலைமறைவான நிழல் உலக தாதா சோட்டா ஷகீலின் கூட்டாளி லைக் அஹ்மத் பிடா ஹூசைன் ஷேக்கை ஏறத்தாழ 25 ஆண்டுகள் கழித்து மகாராஷ்டிர போலீசார் கைது செய்து உள்ளனர்.

சோட்டா ஷகீலின் கூட்டத்தை சேர்ந்த லைக் அகமது ஹூசைன் (வயது 50) துப்பாக்கிச் சூட்டில் கைதேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. கடந்த 1997ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் கூட்டத்தை சேர்ந்த முன்னா தாரி என்பவரை சுட்டுக் கொன்ற வழக்கில் லைக் அகமது ஹூசைனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கில் கடந்த 1998 ஆம் ஆண்டு லைக் அகமது ஹூசைனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து வெளியேறிய லைக் அகமது ஹூசைன் மீண்டும் சிறை திரும்பவில்லை என்றும் வழக்கு தொடர்பான விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தலைமறைவான அவரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர். அதிலிருந்து போலீசார் லைக் அகமது ஹூசைனை தேடி வருகின்றனர். ஏறத்தாழ 25 ஆண்டுகள் கடந்த நிலையில், மகராஷ்டிரா மும்ரா பகுதியில் லைக் அகமது ஹூசைன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது.

மும்ரா பகுதியில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. ஏறத்தாழ 25 ஆண்டுகள் கடந்த நிலையில், லைக் அஹமது ஹூசைனை போலீசாரால் அடையாளம் காண முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே தானே நகரில் டாக்சி ஓட்டுநராக லைக் அஹமது ஹூசைன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது.

ரகசியமாக வலை விரித்த போலீசார், லைக் அஹமது ஹூசைனை கைது செய்தனர். 1997 ஆம், ஆண்டு கொலை வழக்கில் கைதாகி, 1998 ஆம் ஆண்டு அதே வழக்கில் இருந்து ஜாமீன் பெற்று தலைமைறைவான லைக் அஹமது ஹூசைனை ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு பின்னர் போலீசார் மீண்டும் கைது செய்து உள்ளனர்.

இதனிடையே, கடந்த 1997 ஆம் ஆண்டு தொழிலாளர்கள் தலைவர் தத்தா சமந்த் கொலை வழக்கில் இருந்து நிழல் உலக தாதா சோட்டா ராஜனை விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தொழிலாளர்கள் தலைவர் தத்தா சமந்த் கொலை வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் சோட்டா ராஜன் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : நிதிஷ் குமார் எங்களில் ஒருவர்... பாஜக கூட்டணியில் விரைவில் இணைவார்... - ராம்தாஸ் அத்வாலே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.