ETV Bharat / bharat

ஜோத்பூரில் CRPF காவலர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை - CRPF காவலர் தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மத்திய சேமக் காவல் படை (CRPF) காவலர் ஒருவர், தனது குடும்பத்தினரை பிடித்து வைத்துக்கொண்டு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

CRPF Jawan Naresh shot himself  CRPF Jawan Naresh shot himself in Jodhpur  CRPF जवान नरेश ने खुद को मारी गोली  नरेश जाट ने खुद को मारी गोली  CRPF जवान  सीआरपीएफ जवान  CRPF jawan opened fire  CRPF jawan took himself hostage  CRPF jawan took family hostage  jodhpur crpf jawan  जोधपुर सीआरपीएफ जवान  सीआरपीएफ जवान ने परिवार को बनाया बंधक  सीआरपीएफ जवान ने खुद को बनाया बंधक  सीआरपीएफ जवान ने किए फायर  ETV bharat Rajasthan News  Rajasthan Hindi News  Jodhpur Latest news  जोधपुर में सीआरपीएफ कांस्टेबल ने किया हवाई फायरिंग  CRPF constable did eight round air firing in Jodhpur  CRPF Training Center Jodhpur  CRPF காவலர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை  ஜோத்பூரில் CRPF காவலர் தற்கொலை  CRPF காவலர் தற்கொலை  ராஜஸ்தான் CRPF காவலர்
CRPF காவலர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை
author img

By

Published : Jul 11, 2022, 10:31 PM IST

ராஜஸ்தான்: ஜோத்பூரில் சிஆர்பிஎஃப் காவலர் நரேஷ் ஜாத், தன்னையும், தனது குடும்பத்தினரையும் தனது வீட்டில் அடைத்து வைத்துவிட்டு, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இவர் நேற்று (ஜூலை 10) மாலை 5 மணி அளவில் தனது மனைவி மற்றும் மகளை தனது வீட்டில் அடைத்துவைத்துக்கொண்டு, வீட்டின் பால்கனனிக்கு வந்து துப்பாக்கியால் வான் நோக்கி சுட்டுள்ளார். இதனை கண்ட அப்குதியினர், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அதனை கேட்காமல் காவலர்களின் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

இதற்கிடையில், ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் இருந்து அவரது தந்தை மற்றும் சகோதரர் அழைக்கப்பட்டனர், ஆனால் அவர்களின் முயற்சி எந்த பலனையும் தரவில்லை. நரேஷின் தந்தை அவரை தொலைபேசியில் சமாதானப்படுத்த முயன்றும் பலனில்லை. சுமார் 18 மணி நேரம் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் இன்று (ஜூலை 11) அவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது மனைவி மற்றும் 8 மாதக் பெண் குழந்தை மீட்கப்பட்டனர். பல மணி நேர பேச்சு வார்த்தை பலனின்றி போனது.

இதையும் படிங்க: அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.