டெல்லி: தலைநகர் டெல்லியை உலுக்கிய ஷ்ரத்தா படுகொலை வழக்கில் கைதான காதலர் அஃப்தாப் பூனாவாலா, திகார் சிறையில் அடைக்கப்பட்டு போலீசார் விசாரணை வளையத்தில் உள்ளார். இந்நிலையில் அஃப்தாப் பூனாவாலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு குறித்து டெல்லி நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
கடந்த 17ஆம் தேதி வழக்குத் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான அஃப்தாப், வழக்கறிஞர் தன் சார்பாக வாதாடும் வக்காலத்து படிவத்தில் மட்டுமே கையெழுத்திட்டதாகவும், ஜாமீன் படிவத்தை பூர்த்தி செய்யவில்லை என்றும் கூறினார். மேலும் தன்னுடைய ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், டெல்லி நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் வீடியோ கான்பெரன்ஸிங் மூலம் அஃப்தாப் ஆஜரானார். தவறுதலாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும்; அதை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் நீதிபதிகளிடம் அவர் தெரிவித்தார். இதையடுத்து அஃப்தாபின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: முகக் கவசம் கட்டாயம் - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தல்