ETV Bharat / bharat

உலகம் எங்கள் நாட்டை கைவிடக் கூடாது - ஆப்கன் அகதிகள் - aghans in india

உலக நாடுகள் தங்களது நாட்டு மக்களைக் கைவிடாமல், அடைக்கலம் கொடுக்க முன்வர வேண்டும் என்று டெல்லியில் வாழும் ஆப்கன் அகதிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.

Afghan refugees
Afghan refugees
author img

By

Published : Aug 19, 2021, 9:33 AM IST

டெல்லி: அமெரிக்க ராணுவத்தினர் ஆப்கன் நாட்டைவிட்டு வெளியேறத் தொடங்கியதிலிருந்தே தாலிபன்கள் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. வெறும் 10 நாள்களில் தாலிபன்கள் தாக்குதல் நடத்தி ஆப்கனை கைப்பற்றிவிட்டனர். அந்த வகையில், ஆகஸ்ட் 15ஆம் அதிபர் மாளிகை அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

அதற்கு முன்னதாகவே, அப்போதைய அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து, தாலிபன்கள் ஆட்சிக்கு அதிருப்தி தெரிவித்து ஆப்கன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேற முயற்சித்துவருகின்றனர். இதனிடை காபூல் விமான நிலையம் முடக்கப்பட்டது.

அதனால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்துவந்தனர். அமெரிக்கப் படை விமான நிலையத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து வான்வழிப் போக்குவரத்து சேவை தொடர்ந்து நடைபெற்றது.

அதனடிப்படையில் பல்வேறு நாடுகள், ராணுவ விமானங்கள் மூலம் தங்களது நாட்டு மக்களை மீட்டுவருகின்றனர். சில நாடுகள் ஆப்கன் மக்களுக்கும் அடைக்கலம் அளிக்க முன்வந்துள்ளன. குறிப்பாக, இந்தியா இ-எமர்ஜென்சி விசாவை (அவசர நுழைவுஇசைவு) அறிமுகப்படுத்தி இந்திய, ஆப்கன் மக்களை மீட்க முன்வந்துள்ளது.

இந்த நிலையில், பல்வேறு நாடுகளில் உள்ள ஆப்கன் மக்கள், தங்களது நாட்டு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டவும், அடைக்கலம் அளிக்கவும் உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று கோரிக்கைவைத்து வருகின்றனர். அதேபோல, தலைநகர் டெல்லியில் வாழும் ஆப்கன் அகதிகளும் உலக நாடுகளுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

உலகம் எங்கள் நாட்டை கைவிடக் கூடாது

டெல்லி ஜந்தர்மந்தரில், தாலிபன்களுக்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட ஆப்கன் அகதிகள், தங்களது கண்டனத்தைத் தெரிவித்துவருகின்றனர். அத்துடன், தங்களது தாய் மொழியில் பாடல்பாடி, நாடங்களை அரங்கேற்றி கோரிக்கைவைத்து வருகின்றனர்.

இது குறித்து ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஈடிவி பாரத்துக்கு அளித்த பேட்டியில், "இந்தியாவில் நான் 6 ஆண்டுகளாக வசித்துவருகிறேன். இங்கு பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன். அதற்காக இந்திய அரசுக்கு நன்றி. இதேபோல, எங்களது நாட்டில் தவித்துவரும் மக்களுக்கு இந்தியா அடைக்கலம் தர வேண்டும்.

இந்தியா மட்டுமல்லா, உலக நாடுகள், எங்கள் நாட்டையும் மக்களையும் கைவிடக் கூடாது. தங்களது எல்லைகளைத் திறந்து, ஆப்கன் மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும்" என வேண்டுகோள்விடுத்தனர்.

இதனிடையே, தாலிபன்கள், "ஆப்கனில் தூதரகங்கள், அயல்நாட்டு தொண்டு நிறுவனங்கள் வழக்கமாகச் செயல்படலாம். தூதர்கள், தூதரக அலுவலர்கள் அச்சமின்றி தங்களது பணிகளைச் செய்யலாம். அனைவருக்கும் பாதுகாப்பான சூழல் வழங்கப்படும்.

அதேபோல, அரசு ஊழியர்களும் எவ்வித அச்சமுமின்றி வழக்கம்போல் அலுவலகம் வரலாம். முழு நம்பிக்கையுடன் மக்கள் தங்களது வாழ்க்கையைத் தொடரலாம்" எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ’மாற்றுத் துணி, காலணிகளுடன் தான் சென்றேன்’ - ஆப்கனை விட்டு வெளியேறிய அதிபரின் முதல் பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.