டெல்லி : வழக்கின் தீவிரம் கருதி ஜார்க்கண்ட் நீதிபதி கொலை வழக்கு சிபிஐ (மத்திய புலனாய்வு அமைப்பு) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜார்க்கண்ட் அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாத் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் நடைபயிற்சி சென்ற போது ஆட்டோ மோதி கொல்லப்பட்டார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதில் ஈடுபட்ட நபர்களை பிடிக்கும் பணியில் 22 பேர் அடங்கிய தனிப்படையை மாநில காவல்துறை அமைத்தது. இந்நிலையில் வழக்கை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது. வழக்கின் விவரங்களை மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
இந்நிலையில் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளதாக ஜார்க்கண்ட் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் தீவிரம் கருதி சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தன்பாத் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை வழக்கில் ராகுல் குமார் வர்மா (Rahul Kumar Verma), லக்கன் குமார் வர்மா (Lakhan Kumar Verma) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.
இதையும் படிங்க : தன்பாத் நீதிபதி கொலை: ஆட்டோ ஓட்டுநர் கைது - ஷாக்கிங் சிசிடிவி