ETV Bharat / bharat

ஆதித்யா எல்1 விண்கலத்தின் தற்போதைய நிலை என்ன? இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அப்டேட்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2023, 1:21 PM IST

Aditya-L1: ஆதித்யா L1 விண்கலம் ஆரோக்கியமாகவும், சூரியனின் L1 புள்ளியை நோக்கி பயணிப்பதாகவும் இஸ்ரோ தனது X தளத்தில் பதிவிட்டு உள்ளது.

Aditya L1
ஆதித்யா L1 விண்கலம்

ஹைதராபாத்: சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய திட்டமிட்ட இஸ்ரோ ஆதித்யா L1 விண்கலத்தை, பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 2 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

  • Aditya-L1 Mission:
    The Spacecraft is healthy and on its way to Sun-Earth L1.

    A Trajectory Correction Maneuvre (TCM), originally provisioned, was performed on October 6, 2023, for about 16 s. It was needed to correct the trajectory evaluated after tracking the Trans-Lagrangean…

    — ISRO (@isro) October 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஆதித்யா L1 விண்கலம், 110 நாள்கள் பயணமாக சூரியனின் L1 பகுதிக்குச் சென்றடையும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது. மேலும், பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ தூரம் பயணித்து சூரியனின் L1 புள்ளியின் சுற்றுவட்டப் பாதையை அடைந்து, அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் என இஸ்ரோ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், L1 புள்ளியை நோக்கிப் பயணிக்கும் ஆதித்யா விண்கலம், விண்வெளியில் இருக்கும் காற்றில் உள்ள துகள்கள், அயனிகள் குறித்து ஆய்வு செய்யத் தொடங்கி உள்ளது என இஸ்ரோ ஏற்கனவே அறிவித்தது. மேலும், ஆதித்யா விண்கலம் இந்த ஆய்வை தன் வாழ்நாள் முழுவதும் தொடரும் எனவும் மூத்த வானியல் இயற்பியலாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இஸ்ரோ இன்று (அக்.8) தனது x தளத்தில், ஆதித்யா விண்கலம் தொடர்பான விபரங்களை பதிவிட்டு உள்ளது. அதில், “ஆதித்யா எல் 1 விண்கலத்தை ஹாலோ சுற்றுப்பாதையை நோக்கிச் செலுத்துவதற்கான பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உள்ளன. ஹாலோ பாதைக்கு விண்கலத்தை மாற்றம் செய்வதற்கான பணிகள் கடந்த அக்டோபர் 6இல் சுமார் 16 விநாடிகள் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டன.

ஆதித்யா L1 விண்கலத்தின் செயல்பாடுகள் நன்றாக இருக்கிறது மற்றும் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சூரியனின் L1 புள்ளியை நோக்கி ஆதித்யா L1 விண்கலம் பயணிக்கிறது. ஆதித்யா L1 தொடர்ந்து முன்னோக்கி நகர்வதால், காந்த புலமையை அளவிடும் கருவி சில நாட்களுக்குள் இயக்கப்படும்” என இஸ்ரோ தனது X பதிவில் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க:"தெரு தெருவாக, வீடு வீடாக சோதனையிட்டு ஹமாஸ் பயங்கரவாதிகள் அழிக்கப்படுவார்கள்" - இஸ்ரேல் பிரதமர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.