ETV Bharat / bharat

அதானி ஊழல் விவகாரம்: அதானியால் பிரதமர் மோடி வீழ்வது உறுதி.. நாராயணசாமி பரபரப்பு பேட்டி! - Prime minister modi

தொழிலதிபர் அதானி ஊழலில் அனைத்தும் ஆதாரமாக இருக்கிறது, அதனால் அதானியால் மோடி வீழ்வது உறுதி என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அதானி ஊழல் விவகாரம்: அதானியால் பிரதமர் மோடி வீழ்வது உறுதி- நாராயணசாமி பரபரப்பு பேட்டி

author img

By

Published : Feb 11, 2023, 11:01 PM IST

அதானி ஊழல் விவகாரம்: அதானியால் பிரதமர் மோடி வீழ்வது உறுதி- நாராயணசாமி பரபரப்பு பேட்டி

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதானி குடும்பத்தைச் சேர்ந்த 22 பேர், நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். அதில் தவறான பண பரிவர்த்தனை செய்துள்ளனர். தவறான பண பரிவர்த்தனை எனக் கூறி மாற்று கட்சியினரை மத்திய நிறுவனங்கள் விசாரிக்கின்றன.

ஆனால், அதானியை விசாரிக்கவில்லை. காரணம் பிரதமர் வெளிநாடு செல்லும் போதெல்லாம் விமானம் கொடுத்துள்ளார். சில சமயம் அவருடன் பயணித்துள்ளார். பிரதமர் சென்று வரும் நாடுகளில் அதானி ஒப்பந்தம் போட்டுள்ளார். மோடி நிழலில் அனைத்து சட்ட விதிகளையும் மீறி சொத்து சேர்த்துள்ளார்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதானி குறித்து பிரதமர் வாய்திறக்கவில்லை. காங்கிரஸ் கட்சியை குறை சொல்லும் பிரதமர் தவறு செய்து இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதானி குறித்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அதானி விவகாரத்தில் மோடியின் பங்கு அதிகமாக இருக்கிறது. அதானிக்கு புதுச்சேரிக்கும் தொடர்பு இருக்கிறது.

காரைக்கால் துறைமுகத்தை பினாமியாக அதானி எடுத்துள்ளார். கோவையை சேர்ந்த ஓங்கார என்ற நிறுவனத்தை நடத்தும் கோவை சக்திவேல் துறைமுகத்தை எடுத்து பின்னர், அதானிக்கு மாற்றியுள்ளார். புதுச்சேரி அரசின் அனுமதியின்றி இது நடந்து இருக்கிறது” என தெரிவித்தார்.

மேலும், அதிர்ஷ்டவசமாக உச்ச நீதிமன்றம் அதானி விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. ரூ.12 லட்சம் கோடி சொத்து வைத்திருக்கும் அதானி வங்கியில் ஏன் கடன் வாங்க வேண்டும்?. மக்கள் பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போட்டுள்ளார் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு ஜிஎஸ்டி பங்கு ரூ.1200 கோடி வர வேண்டிய தொகையை மானியமாக தருகிறார்கள். மத்திய அரசு புதியதாக ஒன்றும் புதுச்சேரிக்கு எதையும் தரவில்லை. அதே 22 சதவீததை தான் தருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் 28 சதவீதம் வாங்கினோம். ஆனால் புதுச்சேரிக்கு நிதி கொடுப்பதாக மத்திய அரசு கூறுவது மர்ம குகை போல் என்றும், உள்ளே சென்று பார்த்தால் ஒன்றுமில்லை. மத்திய அரசு நிதி அளித்திருப்பது குறித்து மேடை போட்டு பேச முதலமைச்சர் ரங்கசாமி தயாரா? என நாராயணசாமி சவால் விடுத்தார்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு செல்லும் வரை மாநில அந்துஸ்து வராது. நான் மத்திய அமைச்சராக இருந்த போது 13 ரயில் கொண்டு வந்தேன். பாஜக ஆட்சியில் ஒரு ரயில் கூட வரவில்லை என நாராயணசாமி கூறினார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கரஸ்-பாஜக என்பது கட்டாய திருமணம். எப்போது வேண்டுமானாலும் விவாகரத்து ஆகும் என்ற நாராயணசாமி, காரைக்காலில் நல்லம்பள் பகுதியில் ரயில்வே திட்டத்திற்கும், சாலை அமைப்பதற்கும் மணல் அள்ளுவதில் கோடி கணக்கில் ஊழல் நடக்கிறது.

இதற்கான பங்கு அங்குள்ள அமைச்சருக்கும் இங்குள்ள முதலமைச்சர் அலுவலகத்திற்கும் பங்குள்ளது. இதில் மாவட்ட ஆட்சியரும் சிக்குவார் என நாராயணசாமி கூறினார். புதுச்சேரியில் சாமி ஆட்சி நடப்பதால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது என ரங்கசாமி கூறியிருப்பது கேட்டதற்கு, ‘நானும் சாமி தான்’ என கூறி பலமாக நாராயணசாமி சிரித்தார். மேலும் அதானியால் மோடி ஆட்சியை இழப்பார் என்றும், அதானி மோடியின் பினாமி. அதானி ஊழலில் அனைத்தும் ஆதாரமாக இருக்கிறது. அதனால் மோடி வீழ்வது அதானியால் தான். எல்லாம உச்ச நீதின்றத்தில் வெளிவரும் என்றும், மோடியும் தப்பிக்க முடியாது. அதானியும் தப்ப முடியாது என நாராயணசாமி பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க:போதையில் போலீசார் மீது தாக்குதல்.. திருச்சி போலீசார் வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.