டெல்லி : வர்த்தகம், தொழில் துறைகளை கடந்து அண்மைக் காலமாக அதானி குழுமம் செய்தி நிறுவனங்கள் மீது முழு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வணிக மற்றும் நிதி தொடர்பான செய்திகளை வழங்கும் டிஜிட்டல் மீடியா தளமான பிக்யூ பிரைம் செய்தி தளத்தை இயக்கும் குவிண்டில்லியன் பிசினஸ் மீடியாவை அதானியின் ஏஎம்ஜி மீடியா நெட்வோர்க் நிறுவனம் விலைக்கு வாங்கியது.
அதைத் தொடர்ந்து பிரபல ஆங்கில செய்தி நிறுவனமான என்.டி. டிவியின் 65 சதவீத பங்குகளை அதானி குழுமம் விலைக்கு வாங்கி ஊடக வணகத்திற்குள் தனது காலை அகளப்படுத்தியது. இந்நிலையில், இந்தோ ஆசிய செய்து சேவை நிறுவனமான ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்தின் 50 புள்ளி 50 சதவீத பங்குகளை அதானி குழுமத்தின் ஏஎம்ஜி மீடியா விலைக்கு வாங்கி உள்ளது.
ஐஏஎன்எஸ் நிறுவனத்தின் பெருவாரியான பங்குகளை விலைக்கு வாங்குவது குறித்து அந்நிறுவனத்தின் உரிமையாளர் சந்தீப் பம்சாயுடன், அதானி குழுமத்தின் ஏஎம்ஜி நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்திட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், ஐஏஎன்எஸ் நிறுவனத்தின் பங்குகளை என்ன விலை கொடுத்து அதானி நிறுவனம் விலைக்கு வாங்கியது என்பது குறித்த தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
கடந்த 2022 - 23 நிதி ஆண்டில் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் 11 கோடியே 86 லட்ச ரூபாயை வருவாயாக ஈட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இனி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் அதானி குழுமத்தின் ஏஎம்ஜி மீடியா நிறுவனத்தின் துணை நிறுவனமாக அழைக்கப்படும் என்றும் இனி ஐஏஎன்எஸ் நிறுவனத்தின் அனைத்து செயல் மற்றும் மேலாண்மை அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருவதாகவும், ஐஏஎன்எஸ் இயக்குநர்கள் நியமன்ம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் ஏஎம்ஜி மீடியா நிறுவனம் நிர்வகிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : வீரப்பனின் கூட்டாளி ஞானப்பிரகாசம் காலமானார்!