ETV Bharat / bharat

Actor Sarath Babu: நடிகர் சரத்பாபு காலமானார்! - actor sarath babus age

நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 72.

Sarathbabu
Sarathbabu
author img

By

Published : May 22, 2023, 2:50 PM IST

Updated : May 22, 2023, 7:09 PM IST

ஹைதராபாத் : உடல் நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் சரத்பாபு காலமானார். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு வயது 72.

நடிகர் சரத்பாபு தமிழ், தெலுங்கு, கன்னடம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் ரஜினியுடன் இணைந்து நடித்த முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. அது மட்டும் அல்லாமல் பல முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார்.

நடிகர் சரத்பாபுவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.

ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் சரத்பாபு உடல்நிலை இன்று மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை சார்பில் தகவல் வெளியானது. சரத்பாபுவின் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகியவை அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நண்பகல் 1:32 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

இதுதொடர்பாக அவர் சிகிச்சைப் பெற்ற மருத்துவமனையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''அன்புக்குரிய நடிகர் சரத் பாபு ஒரு மாத கால மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்று மதியம் 13:32 மணி அளவில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். மல்டிபிள் மைலோமா காரணமாக பல உறுப்புகள் செயலிழந்து ஆபத்தான நிலையில் பிரபல நடிகர் சரத்பாபு 2023 ஏப்ரல் 20அன்று ஏஐஜி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.

இதையும் படிங்க: ’ரஜினி, கமலை தாண்டி திரையில் ஜொலித்த ஹீரோ’ சரத்பாபு!

நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளியாக, அவர் பலதரப்பட்ட குழுவின் பராமரிப்பில் சிகிச்சையில் இருந்தார். மேலும் நுரையீரலுக்கான செயற்கையான வென்டிலேட்டர், சிறுநீரகத்திற்கான டயாலிசிஸ் ஆதரவு மற்ற சிகிச்சைகள் ஆகியவற்றுடன் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. நோயாளிகளை குணமாக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து இருந்தபோதிலும், அவர் அதில் இருந்து மீள முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் சரத் பாபுவின் இறுதிச்சடங்கு சென்னையில் நாளை நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அவரது உடல் ஹைதராபாத்தில் உள்ள பிலிம் சேம்பரில் வைக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, இன்று இரவு 7 மணிக்கு மேல், சென்னை கொண்டு செல்லப்படுகிறது.

இதையும் படிங்க: பிளம்பர், கொத்தனார், ஓட்டுநர் தேவையா? - வருகிறது தமிழக அரசின் 'செயலி'

Last Updated : May 22, 2023, 7:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.