மலையாள திரைப்பட நடிகர் நெடுமுடி வேணு (73). இவருக்க்கு நேற்று உடல்நலம் குன்றியதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அவர் சிகிச்சைப்பலனின்றி காலமானார். மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் 500 திரைப்படங்களுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 3 தேசிய விருதுகளையும், 6 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் இந்தியன், அந்நியன், பொய் சொல்லப் போறோம், சர்வம் தாள மயம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். வேணுவின் இழப்பு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'கணவர் உயிரிழந்தபோது அழவில்லை'- பவானி ரெட்டி உருக்கம்