பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவோவை வீழ்த்தி இந்தியாவின் பி.வி. சிந்து பதக்கம் வென்றுள்ளார்.
இவருக்கு மலையாள நடிகரும் மெகா ஸ்டாருமான மம்முட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார்.
மீண்டும் ஒருமுறை இந்தியாவை பெருமையடையச் செய்துள்ள பி.வி. சிந்துவுக்கு எனது வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பி.வி.சிந்துவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து