ETV Bharat / bharat

“ரோஷ்னி திட்ட பயனாளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை”- சயீத் ஷாநவாஸ் ஹாசன் - BJP

ரோஷ்னி திட்ட பயனாளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக செய்தித் தொடர்பாளர் சயீத் ஷாநவாஸ் ஹாசன் கூறியுள்ளார்.

சயீத் ஷாநவாஸ் ஹாசன் ஃபரூக் அப்துல்லா ரோஷ்னி சட்டம் Roshni scheme beneficiaries Roshni scheme BJP பாஜக

author img

By

Published : Nov 27, 2020, 11:57 AM IST

ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் ரோஷ்னி (வெளிச்சம்) திட்டத்தில் நில முறைகேடுகள் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தில் பயனாளிகள் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக செய்தித் தொடர்பாளர் சயீத் ஷாநவாஸ் ஹாசன் தெரிவித்தார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் சயீத் ஷாநவாஸ் ஹாசன் ஸ்ரீநகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ரோஷ்னி திட்டத்தின் அனைத்து பயனாளிகளுக்கும் எதிராக எந்தவொரு சார்பும் இல்லாமல் நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஃபரூக் அப்துல்லா மௌனம்

இந்தத் திட்டத்தில் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக விசாரணை நடந்துவருகிறது. ஜம்மு-காஷ்மீர் மக்களை சூறையாடியவர்களிடமிருந்து ஒவ்வொரு பைசாவும் திரும்பப் பெறப்படும்” என்றார்.

மேலும் இந்த விவகாரத்தில் ஃபரூக் அப்துல்லா மௌனம் கலைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ரோஷ்னி திட்டத்தில் முறைகேடு குறித்து சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரோஷ்னி சட்டம்

இந்தத் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஃபரூக் அப்துல்லா மட்டுமின்றி பல்வேறு முதலமைச்சர்களின் பெயர்களும் அடிபடுகின்றன. காஷ்மீரை அதிரவைக்கும் இந்த ரோஷ்னி சட்டம் 2001ஆம் ஆண்டு ஃபரூக் அப்துல்லா முதலமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீரில் நீர்மின் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்தத் திட்டங்களுக்காக ஜம்மு காஷ்மீர் அரசு நிதி திரட்டியது. அப்போது, அரசுக்கு சொந்தமான நிலங்கள் பயனாளிகளிடம் சந்தை விலைக்கு விற்கப்பட்டன.

இழப்பு

அதன்படி வனப்பகுதி, சமநிலை பகுதி என அரசின் நிலங்கள் 2,49,99 ஏக்கர் ஆக்கிரமிப்பாளர்கள் வசமே சென்றன. ஆனாலும் அரசு எதிர்பார்த்த 25 ஆயிரம் கோடி அரசுக்கு கிடைக்கவில்லை, மாறாக ரூ.76 கோடி மட்டுமே கிடைத்தது நினைவுக் கூரத்தக்கது.

இதையும் படிங்க: இளைஞர்களை ஆயுத கலாச்சாரத்துக்கு தூண்டுகிறதா அரசு - உமர் அப்துல்லா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.