மும்பை: மகாராஷ்டிகா மாநிலம் நாக்பூர் நகரில் உள்ள சக்கர்தாரா பாலத்தில் நேற்று (செப்-9) இரவு வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது. இதனால் பைக்கில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குற்றம் சாட்டப்பட்ட கார் டிரைவர் கணேஷ் ஆதவ்வை போலீசார் கைது செய்தனர்.
இரவில் பாலத்தில் கூட்டம் இல்லாததால், டிரைவர் எதிர்திசையில் காரை வேகமாக ஓட்ட முயன்றதால் இந்த விபத்து நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார், "இந்த சம்பவத்தின்போது கார் கட்டுபாட்டை இழந்து ஒன்றன் பின் ஒன்றாக எதிரே வந்த மூன்று வாகனங்கள் மீது மோதியது. அப்போது ஒரே பைக்கில் சென்றுகொண்டிருந்த 4 பேர் உயிரிழந்தனர். இதில் இரண்டு குழந்தைகளும் அடங்கும். மேலும் விசாரணை நடந்துவருகிறது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கர்நாடகா அருகே பள்ளியில் மது அருந்திய ஆசிரியை பணியிடை நீக்கம்!