ETV Bharat / bharat

தலைமறைவாகியுள்ள ரோஹித் ரஞ்சனுக்கு 7 நாட்கள் கெடு - காவல்துறை நோட்டீஸ்! - Rahul Gandhi MP

ஜாமீன் வழங்கப்பட்டுள்ள பத்திரிகையாளர் ரோஹித் ரஞ்சன் வருகிற ஜூலை 12 ஆம் தேதிக்குள் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என ராய்ப்பூர் காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தலைமறைவாகியுள்ள ரோகித் ரஞ்சனுக்கு 7 நாட்கள் கெடு - காவல்துறை நோட்டீஸ்!

author img

By

Published : Jul 7, 2022, 9:18 PM IST

ராய்ப்பூர் (சட்டீஸ்கர்): சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தேவேந்திர யாதவ், கடந்த ஜூலை 1 ஆம் தேதி காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குறித்து தவறான செய்தி பரப்பியதாக தனியார் நியூஸ் தொலைக்காட்சி இயக்குநர் மற்றும் தலைவர், அதன் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சன் மீது புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில், பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்ததாகவும், மக்களின் மத உணர்வுகளை சீர்குலைத்ததாகவும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கடந்த ஜூலை 5 அன்று காஜியாபாத்தில் உள்ள ரோஹித் ரஞ்சன் வீட்டுக்கு சென்று, அவரை கைது செய்தனர். பின்னர் ரோஹித் ரஞ்சனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில் ராய்ப்பூர் தலைமைக் காவல் கண்காணிப்பாளர் உதயன் பெஹர், “ரோஹித் ரஞ்சன் தலைமறைவாக உள்ளார். 7 நாள்களுக்குள் அதாவது ஜூலை 12 ஆம் தேதி ராய்ப்பூர் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் ரோஹித் ரஞ்சன் தரப்பில் ஆஜராக வேண்டும். இந்த அறிவிப்பு, சேனல் அலுவலகத்திற்கு வெளியே ஒட்டப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ராகுல் காந்தி மீது அவதூறு பரப்பியதாக தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.