ETV Bharat / bharat

பஞ்சாப் அரசியல் ஜாம்பவான்களை துடைத்தெடுத்த ஆம் ஆத்மியின் துடைப்பம்!!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாபெரும் வெற்றியால், ஆளும் கட்சியான காங்கிரஸ், ஆண்ட கட்சியான சிரோன்மணி அகாலி தளத்தின் அடித் தளமே ஆட்டம் கண்டுள்ளது.

author img

By

Published : Mar 10, 2022, 1:36 PM IST

Updated : Mar 10, 2022, 4:42 PM IST

aap-landslide-buries-several-political-stalwarts-in-punjab

சண்டிகர்: பஞ்சாப் மாநில தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றி பெறஉள்ளது. இந்த வெற்றி மற்ற கட்சிகளின் மூத்த அரசியல் தலைவர்களின் அரசியல் வாழ்க்கையே ஆட்டம் காணச் செய்துள்ளது. தேர்தலுக்கு முன்னதாகவே காங்கிரஸ் உள்கட்சி பிரச்சனையால் தத்தளித்த நிலையில் இறுதியாக அக்கட்சியின் தலித் முகமான சரண்ஜித் சிங் சன்னியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது. ஆனால் அவர் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை.

அதேபோல காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான நவ்ஜோத் சிங் சித்துவும் தனது தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த வீழ்ச்சி ராகுல், பிரியாங்கா காந்தியின் அரசியல் முடிவுகளை கேள்விக்குறியாக்கிவுள்ளது. இதேபோன்று அகாலி தளத்தை பொறுத்தவரையில், அக்கட்சியின் மூத்த தலைவர்களான பிரகாஷ் சிங் பாதல் , சுக்பிர் சிங் பாதல் ஆகியோர் தங்களது தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

குறிப்பாக முன்னாள் முதலமைச்சரும் காங்கிரசிலிருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்னும் கட்சியை தொடங்கியவருமான கேப்டன் அம்ரிந்தர்சிங் பாட்டியாலா தனது சொந்தத் தொகுதியில் தோல்வியை தழுவிவிட்டார். அத்துடன் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் முன்னணி தலைவருமான ராஜிந்தர் கவுர் லேரா தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

இதையும் படிங்க: உ.பியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் யோகி ஆதித்யநாத்...

Last Updated : Mar 10, 2022, 4:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.