சண்டிகர்: உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(மார்ச்.10) காலை 8 மணிக்கு தொடங்கியது. உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறது. அதன்படி பஞ்சாபில் ஆம் ஆத்மி 90 இடங்களுடன் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து காங்கிரஸ் 14 இடங்களுடன் இரண்டாவது இடத்திலும், சிரோன்மணி அகாலி தளம் கூட்டணி மூன்றாவது இடத்திலும், பாஜக 6 இடங்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளது.
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால், அது மாநிலத்தில் முதல் வெற்றியாகும். 2017ஆம் ஆண்டு தேர்தலில் இரண்டாவது கட்சியாக இருந்த ஆம் ஆத்மி இந்தத் தேர்தலில் முன்னேற்றம் கண்டுள்ளது. முன்னதாக காங்கிரஸ் உட்கட்சி பூசல், பதவிக்கு எதிரான போராட்டங்களுடன் தேர்தலில் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேர்தல் முடிவுகள் 2022: நான்கு மாநிலங்களில் பாஜக முன்னிலை