ETV Bharat / bharat

"பாஜக அல்ல, ஆம்ஆத்மிதான் காரணம்..." - வாபஸ் குறித்து ஆம்ஆத்மி வேட்பாளர் திட்டவட்டம்! - மணீஷ் சிசோடியா

ஆம்ஆத்மி சூரத் கிழக்கு தொகுதி வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா வாபஸ் பெற்றது பாஜகவின் சதி என்று ஆம்ஆத்மி குற்றம்சாட்டிய நிலையில், அந்த குற்றச்சாட்டை கஞ்சன் ஜரிவாலா மறுத்துள்ளார். வாபஸ் பெற ஆம்ஆத்மி நிர்வாகிகள் தான் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

aap-
aap-
author img

By

Published : Nov 16, 2022, 10:05 PM IST

டெல்லி: குஜராத் சட்டப்பேரவை தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக- காங்கிரஸ் -ஆம்ஆத்மி இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், ஆம் ஆத்மியின் சூரத் கிழக்கு தொகுதி வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா குடும்பத்துடன் மாயமானார். அவர் கடத்தப்பட்டதாக நேற்று(நவ.15) பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

அவரை பாஜகவினர் கடத்திவிட்டதாக ஆம்ஆத்மி குற்றம் சாட்டியது. தோல்வி பயம் காரணமாகவே தங்களது வேட்பாளரை பாஜக கடத்தியுள்ளது என்றும் குற்றம்சாட்டினர்.

இதனிடையே வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா ஏராளமானோர் புடை சூழ சென்று தனது வேட்பு மனுவை வாபஸ் வாங்கினார். இதுதொடர்பாக வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இது பாஜகவின் திட்டமிட்ட சதி என ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம்ஆத்மியினர் குற்றம்சாட்டினர்.

  • Our candidate from Surat (East), Kanchan Jariwala, and his family missing since yesterday. First, BJP tried to get his nomination rejected. But his nomination was accepted. Later, he was being pressurised to withdraw his nomination.

    Has he been kidnapped?

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) November 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கஞ்சன் ஜரிவாலா வாபஸ் பெறும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட ஆம் ஆத்மி தேசிய செய்தித் தொடர்பாளர் ராகவ் சத்தவ், "இந்த வீடியோவைப் பாருங்கள். காணாமல் போன எங்கள் வேட்பாளர், அடையாளம் தெரியாத நபர்கள் புடைசூழ, போலீஸ் பாதுகாப்புடன் வந்து மனுவை வாபஸ் பெறுகிறார். இது பாஜகவின் சதி. சுற்றியிருப்பவர்கள் பாஜகவினர் தான். அவர்களுக்கு போலீஸ் ஆதரவு வேறு. நேர்மையான சுதந்திரமான தேர்தல் என்பதெல்லாம் வெறும் பகடியாகிவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, "கஞ்சன் ஜரிவாலா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். வேட்பு மனுவை வாபஸ் பெறும்படி அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுள்ளது. பட்டப்பகலில் ஜனநாயகம் சூறையாடப்படுகிறது என்பதை தேர்தல் ஆணையத்திடம் கூற விரும்புகிறேன். இதனை தேர்தல் ஆணையம் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும். ஆம் ஆத்மி சீட்டுகள் விற்கப்படுவதில்லை என்பதை இந்த சம்பவம் நிரூபித்துள்ளது" என்றார்.

இந்த நிலையில், பாஜகவினர் கடத்தியாக ஆம்ஆத்மியினர் கூறியதை, கஞ்சன் ஜரிவாலா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆம்ஆத்மியிலிருந்துதான் தனக்கு அழுத்தம் வந்ததாகவும், பாஜகவினர் தன்னைக் கடத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஆம்ஆத்மி நிர்வாகிகள் தன்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால்தான், தான் தலைமறைவானதாகவும், 80 லட்சம் அல்லது ஒரு கோடி ரூபாயை தன்னால் தர இயலாது என்றும் தெரிவித்தார். அவர்கள் கேட்கும் அளவுக்கு பணம் தர முடியாத காரணத்தால்தான் மனுவை வாபஸ் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தாலியில் 'தாமரை'.. பர்ஸில் 'கை'.. களைகட்டும் குஜராத் தேர்தல்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.