டெல்லி: தலைநகர் டெல்லி மாநகராட்சியில் உள்ள 250 வார்டுகளுக்கு கடந்த 4-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. டெல்லியில் வடக்கு, தெற்கு, கிழக்கு என மூன்றாக இருந்த மாநகராட்சிகளை ஒன்றாக இணைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.இந்தத் தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
50 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் ஆம் ஆத்மி 126 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 96 வார்டுகளிலும், காங்கிரஸ் 11 வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளது.
இதையும் படிங்க: Parliament winter session: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது!