டெல்லி: அதிநவீன விமானப் போக்குவரத்துக்கான தீர்வுகளை கண்டறிதல், அடுத்த தலைமுறைக்கான நீடித்த விமானப் போக்குவரத்து தொழில்நுட்பத்தை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல் உள்ளிட்டவை கொள்கைகளை அடிப்படையாக கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம், ஸ்வீடன் நாட்டின் வான் போக்குவரத்து சேவை அமைப்பான எல்.எஃப்.வி. நிறுவனத்துடன் கையெழுத்திட்டுள்ளது.
இரு நாடுகளிடையே விமானப் போக்குவரத்து சார்ந்த நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தை இருதரப்பும் பகிர்ந்துகொள்ள இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகை செய்யும். ஸ்விடனின் புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் நிபுணத்துவத்தை இந்திய நிறுவனங்கள் பயன்படுத்தி வளர்ச்சியை விரைவுபடுத்தவும் இது உதவும்.
இந்த ஒப்பந்தத்தின்படி, பரஸ்பர நலன்சார்ந்த துறைகளில் தொழில் நிறுவனங்கள் ஒத்துழைப்பை மேற்கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் உறுப்பினர் (விமானப் போக்குவரத்து சேவைகள்) எம். சுரேஷ் மற்றும் ஸ்வீடன் நாட்டின் எல்.எஃப்.வி. நிறுவனத்தின் துணை தலைமை இயக்குனர் மேக்னஸ் கோரல் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி விமானப் போக்குவரத்து மேலாண்மை, விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு, தொலையுணர்வு விமான நிலைய மேலாண்மை மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்ட 10 துறைகளில் இருநாடுகளும் கூட்டாக ஒத்துழைப்பை வழங்க உள்ளன.
இதையும் படிங்க: ஓய்வுபெற்றார் என்.வி. ரமணா... பின்னணியும் வரலாற்றுத்தீர்ப்புகளும்...