ETV Bharat / bharat

என்னை துண்டு துண்டுடாக வெட்டப்போவதாக மிரட்டினார்... ஷ்ரத்தாவின் புகார் கடிதம்... - Shraddha Walkar complaint

டெல்லியில் 35 துண்டுகளாக வெட்டிகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தாவின் புகார் கடிதம் வெளியாகியது.

ஷ்ரத்தாவின் புகார் கடித
ஷ்ரத்தாவின் புகார் கடித
author img

By

Published : Nov 23, 2022, 4:05 PM IST

டெல்லியில் 35 துண்டுகளாக வெட்டிகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா வழக்கில் ஆப்தாப் அமின் பூனாவாலா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடந்துவருகிறது. இதனிடையே 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்தாப் அமின் மீது மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் உள்ள துலின்ஜ் காவல் நிலையத்தில் ஷ்ரத்தா அளித்த புகார் கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில் ஷ்ரத்தா, "நானும் ஆப்தாப் அமினும் விஜய் விஹார் காம்ப்ளக்ஸில் வசித்துவந்தோம். அவருடன் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததால் அவருடன் தங்கியிருந்தேன். ஆனால், அவர் தனக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்று வெளிப்படையாக தெரிவித்துவிட்டார். அதன்காரணமாக அவரைவிட்டு விலகிச்சென்றேன்.

இருப்பினும், அவர் எனக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுக்கிறார். உடல் ரீதியாக துன்புறுத்துகிறார். பார்க்கும் இடத்தில் எல்லாம் கொலை செய்துவிடுவேன் என்றும் துண்டு துண்டுடாக வெட்டிவிடுவேன் என்றும் மிரட்டல் விடுக்கிறார். இந்த கொலை மிரட்டல் குறித்து அவரது பெற்றோருக்கும் தெரியும். ஆனால், ஆப்தாப்பை அவர்கள் கண்டிக்கவில்லை. ஆகவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து துலின்ஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அவர்கள் தங்கியிருந்த விஜய் விஹார் காம்ப்ளக்ஸில் விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே ஆப்தாப் உடன் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக 4 நாட்களிலேயே ஷ்ரத்தா அந்த புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

இதையும் படிங்க: ஷ்ரத்தா கொலை போன்று மேலும் ஒரு சம்பவம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.