ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ஹயத்நகர் பகுதியில் காலி வீடு தேடி வருவது போல் நடித்து இளைஞர் ஒருவர் இளம்பெண்ணின் சங்கிலியை திருட முயன்றார். இந்நிலையில் அந்த பெண்ணின் கண்களில் மிளகாய்ப் பொடியை கொள்ளையன் தூவியுள்ளார். மிளகாய் பொடி கண்ணில் பட்டபின்னும் அப்பெண் திருடனை விரட்டி பிடித்துள்ளார். இதனை அக்கம்பக்கத்தினர் மற்றும் காவல்துறையினர் அப்பெண்ணை பாராட்டி வருகின்றனர்.
ஹயத்நகர் காவல்துறையினர் கூறுகையில், அப்பன்னகுடம் கிராமத்தை சேர்ந்த சாண்ட்ரா சிரிஷா, நாகேஷ் ஆகியோர் ஹயத்நகர் பொம்மலகுடி அருகே அமைந்துள்ள பாலாஜி நகர் சாலையில் அமைந்துள்ள வீட்டின் முதல் தளத்தில் வசித்து வருகின்றனர். இந்த வீட்டின் உரிமையாளர் பிக்ஷமய்யா அவரது மனைவியுடன் மத்திய பிரதேசத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் சாண்ட்ரா தங்கியுள்ள வீட்டின் அருகே ஒரு காலி வீடு இருப்பதால் அதற்கு டூலெட் பலகை இருந்துள்ளது.
நேற்று(ஆகஸ்ட் 4) அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் மேல் தளத்திற்கு சென்று, வாடகைக்கு காலியாக உள்ள குடியிருப்பைக் காட்டுமாறு சாண்ட்ராவிடம் கேட்டுள்ளார். ஓனர் ஊரில் இல்லை என்று சிரிஷா பதிலளித்தும் திரும்பி செல்லாமல், ஓனரிடம் போன் செய்து பேசிவிட்டு வீட்டை காட்டுமாறு கூறியுள்ளார்.
எனவே நம்பிக்கையுடன் வீட்டை காட்டியுள்ளார். அந்த நேரத்தில் திடீரென அந்த இளைஞன் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை சாண்ட்ராவின் கண்களில் தூவி விட்டு, அவரது கழுத்தில் இருந்த மூன்று பவுன் தங்க சங்கிலியை அறுத்து விட்டு ஓடியுள்ளான்.
திருடனை துரத்தி சென்ற சாண்ட்ரா, திருடன் சென்ற பைக்கை பிடித்து பின்னோக்கி இழுத்து கீழே விழுந்துள்ளார். பின்னர் அருகிலிருந்த இரண்டு இளைஞர்கள் சேர்ந்து அந்த திருடனை பிடித்துள்ளனர். ஹயத்நகர் காவல்துறையினரிடம் திருடன் ஒப்படைக்கப்பட்டார். சாண்ட்ராவின் கண்ணில் மிளகாய் பொடி எரிச்சல் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் திருடனை பிடித்துள்ள வீரச் செயலை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க:கச்சநத்தம் மூவர் கொலை வழக்கு - 27 பேருக்கு ஆயுள் தண்டனை