ETV Bharat / bharat

பஸ் ஸ்டாண்டில் வாடகை பாக்கி வசூல்.. அதிகாரிகளை அரிவாளால் மிரட்டிய பெண்! - கர்நாடகா

பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக கடையின் வாடைகை பாக்கியை வசூலிக்க நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகளை வணிகரின் மனைவி அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார்.

வாடகை பாக்கி கேட்டு வந்த அதிகாரிகளை அரிவாளை காட்டி மிரட்டிய பெண்

author img

By

Published : Dec 13, 2022, 11:11 AM IST

Updated : Dec 13, 2022, 11:17 AM IST

வாடகை பாக்கி கேட்டு வந்த அதிகாரிகளை அரிவாளை காட்டி மிரட்டிய பெண்

மைசூரு: சத்கல்லி பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில், ஷபீக் அகமது என்பவர், 12 ஆண்டுகளுக்குக் குத்தகை பெற்றிருந்தார். ஆனால் அவருக்கு வாடகை பாக்கி இருந்தது. இந்த ஒப்பந்தம், சமீபத்தில் டிச., 10ல் முடிவடைந்தது. எனவே, நிலுவையில் உள்ள, 1 கோடியே 80 லட்சத்தை வசூல் செய்ய கே.எஸ்.ஆர்.டி.சி. அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில், டிச.10 சனிக்கிழமை, சத்கல்லி பேருந்து நிலையம் அருகே அதிகாரிகள் வந்து விசாரித்தபோது, ஷாபியும், அவரது மனைவி முனி புன்னிசாவும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ஷாபியின் மனைவி முனி புன்னிசா அதிகாரிகளை அரிவாளைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் செல்போனில் படம்பிடித்து வைரலாகி வருகின்றனர். தம்பதி மீது அதிகாரிகள் உதயகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் தம்பதி மீது IPC 1860 (U/s-353,504,506,34) இன் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ளவர்களைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: OTP இல்லாமல் மிஸ்டு கால் மூலம் ரூ.50 லட்சம் திருட்டு.. பொதுமக்கள் உஷார்!

Last Updated : Dec 13, 2022, 11:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.