பெங்களூரு: கபடி விளையாடிய போது திடீரென மயங்கி விழுந்த மாணவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு புறநகர் அட்டிபெலே பகுதியில் உள்ள தனியார் ஜூனியர் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
விளையாட்டு விழாவை முன்னிட்டு மகளிருக்கென தனியாக கபடி போட்டி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட சங்கீதா(19) என்ற மாணவி, விளையாடிக் கொண்டு இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சங்கீதாவை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சங்கீதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏறகனவே உயிரிழந்து விட்டதாகவும், மாரடைப்பு காரணமாக சங்கீதா மரணித்ததாகவும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சென்ற போலீசார், சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கபடி விளையாட்டின் போது இளம் வீராங்கனை மாரடைப்பு ஏற்பட்டு மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மொழி தெரியாததால் மனைவியின் சடலத்தை தோளில் தூக்கி திரிந்த அவலம்!