ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ரயில் நிலையம் அருகே பெண் ஒருவர் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து 500 மீட்டர் தொலைவில் நடந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஜிஆர்பி போலீசார் தரப்பில், "ஜெய்ப்பூரை சேர்ந்த 35 வயதான பெண் தனது கணவரை ரயிலில் ஏற்றிவிடுவதற்காக நேற்றிரவு ஜெய்ப்பூர் ரயில் நிலையம் வந்தார்.
ரயில் வர தாமதமாகியதால் கணவருக்கு உணவு வாங்குவதற்காக ரயில் நிலையத்தைவிட்டு வெளியே சென்றார். அப்போது அவரை 5 பேர் கொண்ட கும்பல் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தூக்கிச்சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளது. அதன்பின் அந்த பெண் அங்கிருந்து தப்பித்து, எங்களிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் விசாரணையை தொடங்கியுள்ளோம். சம்பவயிடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவருகிறோம்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பில்கிஸ் பானு வழக்கு... மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு...