ETV Bharat / bharat

2 இதயம், 4 கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை! - ரத்தங்கர்

ராஜஸ்தான் மாநிலம் ரத்தங்கரில் உள்ள கங்காராம் தனியார் மருத்துவமனையில் இரு இருதயம், நான்கு கால்களுடன் அதிசய குழந்தை பிறந்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்
author img

By

Published : Mar 6, 2023, 7:42 PM IST

ரத்தங்கர்: ராஜஸ்தான் மாநிலம் கங்காராம் தனியார் மருத்துவமனையில் மார்ச் 5 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 19 வயது கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் கைலாஷ் சோங்காரா சோனோகிராபி செய்தார். அதில் கர்ப்பிணியின் வயிற்றில் விசித்திரமான குழந்தை இருப்பது தெரியவந்தது. அந்த குழந்தைக்கு இரு இருதய துடிப்புகள் உணரப்பட்டன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் ஒரு மணிநேரத்தில் அந்த பெண்மணிக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு இரு இருதயம், நான்கு கால்களுடன் பிறந்ததாக மருத்துவர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். பிரசவத்திற்கு பிறகு சுமார் 20 நிமிடங்கள் உயிரோடு இருந்த குழந்தை அதன் பின்னர் இறந்துவிட்டதாக மருத்துவர் கைலாஷ் சொங்காரா கூறியுள்ளார்.

இதையும் படிங்க: உமேஷ் பால் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்கவுண்டர்! உத்தர பிரதேச போலீஸ் அடுத்தடுத்து அதிரடி!

பிறந்த குழந்தைக்கு ஒரு தலை, நான்கு கைகள், நான்கு கால்கள் மற்றும் இரண்டு இதயங்கள் இரண்டு முதுகெலும்புகளுடன் இருப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில் "இவ்வளவு சிரமமான பிரசவம் சுகப்பிரசவமாக செய்ய எங்களுக்கு சிரமமாக இருந்தது, ஆனால் சரியான நேரத்தில் சுகப்பிரசவம் செய்து கர்ப்பிணியின் உயிர் காப்பாற்றப்பட்டது. அதேசமயம், பிறந்த 20 நிமிடங்களில் குழந்தை இறந்துவிட்டது. கர்ப்பிணிப் பெண் இப்போது முற்றிலும் ஆரோக்கியமாகவும் இயல்பாகவும் இருக்கிறார். இந்த வகை பிரசவம் கான்ஜுனோகல் அனோமலி என்று அழைக்கப்படுகிறது" என்றனர்.

இதையும் படிங்க: குழந்தைகளை தாக்கும் அடினோ வைரஸ்.. கொல்கத்தாவில் 2 குழந்தைகள் பலி.. அறிகுறிகள் என்ன.?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.