ETV Bharat / bharat

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு - இளைஞர் படுகாயம்! - Ludhiana court fire

நீதிமன்ற வளாகத்தில் இரு கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூடு
author img

By

Published : Feb 7, 2023, 2:33 PM IST

பஞ்சாப்: லூதியானா நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்த இரு மர்ம கும்பல் தங்களுக்குள் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. திடீர் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்ட நிலையில் அப்பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதில் மர்ம நபர் சுட்டதில் அந்த வழியாக சென்ற இளைஞர் மீது தோட்டா பாய்ந்தது.

படுகாயம் அடைந்த இளைஞர் சுருண்டு விழுந்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்து மர்ம கும்பல் தப்பிய நிலையில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய இளைஞரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு வாங்கிய நபர் யாரென தெரியாத நிலையில், விசாரணை நடத்தி வருவதாகவும், என்ன காரணத்திற்காக துப்பாக்கிச் சூடு நடந்தது, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட கும்பல் யார் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை தேடி வருவதாக போலீசார் கூறினர். மேலும் சம்பவ இடத்தில் இருந்து இரு துப்பாக்கி காலி துப்பாக்கி உறைகளை போலீசார் கைப்பற்றினர். நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

இதையும் படிங்க: அதானி விவகாரம்: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு.. எதிர்கட்சிகள் தொடர் அமளி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.