ஐதராபாத் : அண்மையில் வெளியான அய்வு அறிக்கையில் எதிர்பார்த்த அளவை விட மைக்ரோ பிளாஸ்டிக் நச்சுக் கழிவுகள் அதிகளவிலான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலில் தோராயமாக 2 லட்சத்து 40 ஆயிரம் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது முன்னர் கணிக்கப்பட்ட மதிப்பீடுகளை காட்டிலும் 10 முதல் 100 மடங்கு அதிகரித்து உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டு உள்ளது. உலகளவில் ஆண்டுதோறும் தோராயமாக 40 கோடி பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேநேரம் ஆண்டுதோறும் 3 கோடிக்கும் அதிகமான பிளாஸ்டிக்குகள் நிலம் மற்றும் நீர் நிலைகளில் கொட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிலம் மற்றும் நீர் நிலைகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் நாளடைவில் சிறுசிறு துகள்களாக உடைகின்றன. அதேபோல் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட செயற்கை பின்னலாடைகள் பயன்படுத்தும் போது சிறுசிறு துகள்களாக உடைபட்டு வெளியேறுகின்றன. இதில் ஒரு மைக்ரோ மீட்டர் முதல் 5 மில்லி மீட்டர் அளவு கொண்ட பிளாஸ்டிக்குகள் மைக்ரோ பிளாஸ்டிக்காக வகைப்படுத்தப்படுகின்றன.
அதேநேரம் மைக்ரோமீட்டருக்கும் குறைவாக பிளாஸ்டிக் துகள்கள் நானோ பிளாஸ்டிக்காக வகைப்படுத்தப்படுகிறது. அண்மைக்காலமாக நிலத்தடி நீர், நிலம், நீர் நிலைகள், மண், குடிநீர், உணவு மற்றும் பனிப் பிரதேசங்களில் உள்ள ஐஸ் கட்டிகளில் கூட மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளன.
பிளாஸ்டிக் துகள்கள் கலந்து உணவு மற்றும் குடிநீரை எடுத்துக் கொள்வதனால் மனிதன் மற்றும் உயிரினங்களும் கடுமையாக பாதிகப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உணவு மற்றும் குடிநீர் மூலம் மனித உடல்களை அடையும் பிளாஸ்டிக் துகள்கள் அப்படியே நுரையீரல், சிறு மற்றும் பெருங்குடல் பகுதியில் தஞ்சமடைந்துவிடுகின்றன.
நாளடைவில் மூளை மற்றும் இருதயத்தை இந்த பிளாஸ்டிக் துகள்கள் பாதிப்படையச் செய்வதாகவும், கருவில் உள்ள குழந்தைகளை கூட விட்டு வைக்காமல் இந்த பிளாஸ்டிக் துகள்கள் கொடிய விளைவுகளை ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டு உள்ளது. இந்த பிளாஸ்டிக் துகள்களால் ஏற்படும் சுகாதார பக்கவிளைவுகள் குறித்து உலகளாவிய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அண்மையில் அமெரிக்காவின் கொலம்பியாவில் Lamont Doherty Earth Observatory பருவநிலை ஆராய்ச்சி மையத்தில் தண்ணீர் பாட்டிலில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்தது குறித்து ஆய்வு நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. Raman scattering microscopy முறை மூலம் இரண்டு லேசர்களை பயன்படுத்தி குறிப்பிட்ட பிளாஸ்டிக் துகள்களை அதிர்வடையச் செய்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னர் குறைந்த மற்றும் பெரிய எண்ணிக்கையிலான பிளாஸ்டிக் துகள்களை கொண்டு ஆய்வு நடத்தியதால் சரியான முடிவுகள் கிடைக்கப் பெறவில்லை என்றும் தண்ணீர் பாட்டிலில் பெரும்பாலும் polyethylene terephthalate அதிகளவில் காணப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
Polyamide, polystyrene, polyvinyl chloride, மற்றும் polymethyl methacrylates உள்ளிட்ட 7 வகையிலான மைக்ரோ பிளாஸ்டிக்குகள் தண்ணீர் பாட்டில்கள் கண்டறியப்பட்டு உள்ளதாகவும் இவை 10 சதவீதம் நானோ துகள்களால் தண்ணீரில் கலந்து இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன்! ஆனாலும் ஆந்திர உயர்நீதிமன்றம் கண்டீசன்? என்ன தெரியுமா?