குஜராத் மாநிலம் அகமதாபாத் கம்பாட் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் பிரகாஷ் சிங் ரூ.50 லட்சம் லஞ்சமாக கேட்பதாக ஒருவர் குற்றப்பிரிவு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் பிரகாஷ் சிங் நடவடிக்கைகளை காவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். காவலர்கள் கூறியபடி புகார் கொடுத்த நபர், ஒரு ஹோட்டலில் வைத்து ரூ.50 லட்சத்தை பிரகாஷ் சிங்கிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு பிரிவினர் அவரை கையும், களவுமாக கைதுசெய்தனர்.
இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் வருமானத்திற்கு அதிகமான சொத்துகளை சேர்த்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவலர்கள் கைது!