ETV Bharat / bharat

ஆன்லைன் ஆப் மூலம் மோசடியால் ரூ.2 ஆயிரம் கடனுக்கு ரூ.15 லட்சம் கட்டிய நபர் - Ajmad ulla

கர்நாடக மாநிலத்தில் ஆன்லைன் செயலில் மூலம் 2 ஆயிரம் ரூபாய் கடன்பெற்றவர் மிரட்டல் கும்பலால் ரூ.15 லட்சம் வரை திருப்பிச்செலுத்தியுள்ளார்.

Etv Bharatஆன்லைன் ஆப் மூலம் மோசடி  - 2 ஆயிரம் கடனுக்கும 15 லட்சம் கட்டிய நபர்

author img

By

Published : Aug 14, 2022, 4:56 PM IST

சிக்கபல்லாபூர்(கர்நாடகா): கர்நாடகா மாநிலம், சிக்கபல்லாபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜ்மத் உல்லா. இவர் நந்தினி பால் அங்காடியில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு 37 வயதாகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் இவருக்கு பணத்தேவை ஏற்பட்டதால் ’மேஜிக் லோன் ஆப்’ எனும் ஆன்லைன் செயலில் மூலம் 2 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இவர் வாங்கிய கடனுக்கு 15 லட்சம் ரூபாய் திருப்பி செலுத்தியுள்ளார்.

அஜ்மத் அந்த ஆன்லைன் ஆப் மூலம் ரூ.2,000 கடனுக்கு வட்டியாக ரூ.3,500 செலுத்தியுள்ளார். இந்த கடனின்போது இவரின் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆகிய முக்கிய தகவல்களை அந்த கடன் ஆப்பின் மூலம் ஆன்லைன் மோசடி செய்பவர்கள் திருடியுள்ளனர்.

இதனையடுத்து இந்த ஆதார் அட்டை மற்றும் பான் எண்ணை தவறாகப் பயன்படுத்தி, 20க்கும் மேற்பட்ட பல்வேறு கடன் ஆப் மூலம் லட்சக்கணக்கான ரூபாயை கடனாகப்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் அஜ்மத் கடன் பெறாமலேயே, லட்சக்கணக்கான ரூபாய் கட்டும்படி, லோன் ஆப் மோசடி செய்தவர்களால் வற்புறுத்தப்பட்டுள்ளார். மேலும் பணம் கொடுக்கவில்லை என்றால் அவரது புகைப்படத்தைப் பயன்படுத்தி அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பெண்களுடன் நிர்வாணமாக இருப்பது போல் மாற்றி அனுப்புவதாக அஜ்மத்தை அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மிரட்டினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அஜ்மத், தனது எஸ்பிஐ வங்கிக்கணக்கில் இருந்து ரூ.14,43,799 உட்பட நண்பர்களிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி, சுமார் ரூ.15,56,731 லட்சத்தை மோசடி செய்த நபரின் கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

மேலும் அஸ்மத்தை மிரட்டிய மோசடி நபர்கள், அவரது நண்பர்களுக்கும் நிர்வாண காட்சிகளை அனுப்பிப்பணம் தரும்படி மிரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த அஸ்மத், சிந்தாமணி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:அருகம்பாக்கம் நகைக்கொள்ளையில் தீவிரமடையும் போலீஸாரின் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.