ETV Bharat / bharat

ஆந்திராவில் இரண்டு ரயில்கள் மோதி கோர விபத்து! 8 பேர் பலி! பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு! - ஆந்திராவில் ரயில் தடம் புரண்டு விபத்து

Andra Pradesh Passenger trains Collided : ஆந்திராவில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதிக் கொண்ட கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 8:55 PM IST

Updated : Oct 29, 2023, 11:05 PM IST

விஜயநகரம் : ஆந்திராவில் இரண்டு பயணிகள் ரயில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டது. இந்த விபத்தில் 8 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அலமண்டா, கந்தகபள்ளி ரயில் நிலையத்திற்கு இடையே இந்த கோர ரயில் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • #UPDATE | There was a rear collision between the Visakhapatnam-Palasa passenger train and the Visakhapatnam-Ragada passenger train. 3 coaches were involved in the accident and 10 injured. Rescue operations are underway, Local administration and NDRF were informed for assistance… https://t.co/foBoTg0FRp

    — ANI (@ANI) October 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டு இருந்த பயணிகள் ரயில் மற்றும் விசாகப்பட்டினம் - பால்சா பயணிகள் ரயில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் இரு ரயில்களின் மூன்று பெட்டிகள் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

  • CM YS Jagan Mohan Reddy ordered to take immediate relief measures and to send as many ambulances as possible from Visakhapatnam and Anakapalli, the nearest districts of Vizianagaram, and to make all kinds of arrangements in nearby hospitals to provide good medical care. The Chief… https://t.co/qQ1PujGm9G

விபத்து நடந்த இடத்தில் உள்ளூர் நிர்வாகம், தேசிய பேரிடர் மீட்பு படை மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்க விசாகப்பட்டினம், அனகபள்ளி உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆம்புலன்ஸ்கள் விரைந்து உள்ளன. முழுவீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு பொது மக்களை காக்குமாறு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

விபத்து குறித்து தகவல் அறிய மத்திய ரயில்வே அமைச்சகம் உதவி எண்களை அறிவித்து உள்ளது. BSNL பயனர்கள் 08912746330, 08912744619 என்ற எண்ணிலும், Airtel sim பயனாளிகள் 81060 53051 81060 53052 என்ற எண்களையும் BSNL sim பயனாளிகள் 85000 41670, 85000 41671 என்ற எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என மத்திய ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது.

சம்பவ இடத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விபத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் கூறப்பட்டு உள்ளது. இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. மீட்பு படையினருடன் சேர்ந்து உள்ளுர் மக்களும் விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரயில் விபத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விபத்து குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்ததாகவும், விபத்தில் சிக்கிக் கொண்ட மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு இடம் மாற்றப்பட்டு வருவதாகவும், விபத்து தொடர்பாக அந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் பேசியதாகவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.

  • Union Railway Minister Ashwini Vaishanw tweets, "Rescue operations are underway. All passengers shifted. PM Narendra Modi reviewed the situation. Spoke to the CM of Andhra Pradesh, state govt and railway teams are working in close coordination." pic.twitter.com/AuKiJdOyT8

இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்து குறித்து கவலை தெரிவித்து உள்ள பிரதமர் மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் பிரதமர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டு உள்ளார்.

  • The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh from the PMNRF for the next of kin of each deceased due to the train derailment between Alamanda and Kantakapalle section. The injured would be given Rs. 50,000. https://t.co/K9c2cRsePG

    — PMO India (@PMOIndia) October 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க : ஈடிவி பாரத்தின் பிரத்யேக நேர்காணலை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின்!

Last Updated : Oct 29, 2023, 11:05 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.