மும்பை: பயங்கரவாத எதிர்ப்பு படை அளித்த தகவலின்படி, ‘கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையில் நைஜீரிய இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்குரிய மாத்திரைகள் மற்றும் போதைப்பொருள் போன்ற பவுடருடன் பிடிபட்டார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த இளைஞரிடம் இருந்த பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகளின் மாதிரிகள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில் நைஜீரிய இளைஞரிடம் இருந்து எடுத்த மாத்திரைகள் மற்றும் போதைப்பொருள் போலி என தெரிய வந்தது.
இதன் காரணமாக, சந்தேகிக்கப்படும் குற்றவாளியை விடுவிக்குமாறு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் குற்றம் செய்யாமல் ஒன்றரை ஆண்டுகள் இளைஞர் சிறையில் இருந்ததால், அவருக்கு இழப்பீடு வழங்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க:குஜராத் ஜாம்நகர் ஹோட்டலில் தீ விபத்து