சிம்தேகா: ஜார்க்கண்ட் மாநிலம் சிம்தேகா மாவட்டம், மாத்ரமேட்டா கிராமத்தைச் சேர்ந்த நயீம் மியான் என்ற இஸ்லாமிய இளைஞர், இந்து போல நடித்து இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். சுமார் ஐந்து ஆண்டுகளாக அந்த இளம்பெண்ணுடன் நெருங்கிப் பழகியுள்ளார். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அந்த பெண்ணுடன் உடலுறவு கொண்டுள்ளார். இதனால் அந்த பெண் கருவுற்றார்.
இதையடுத்து திருமணம் செய்து கொள்ளும்படி, நயீம் மியானிடம் கேட்டபோது, அவர் மறுத்துள்ளார். பிறகு தான் இந்து இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே காதலியின் மைனர் சகோதரியையும் நயீம் மியான் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.
அதனை வீடியோவாக எடுத்து வைத்து சகோதரிகள் இருவரையும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நயீம் மியானை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - தலைமை ஆசிரியர் கைது