குஜராத்: பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மிதுன் தாக்கூர் (22) தனது தந்தை பிபின் தாக்கூருடன், ராஜ்கோட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மிதுனும் ஜங்லேஷ்வரில் உள்ள ராதாகிருஷ்ண சொசைட்டியில் வசிக்கும் 18 வயதான சுமியா கதிவாரும் சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது
இந்நிலையில் கடந்த மே 9ஆம் தேதி மிதுன், காலை 10 மணியளவில் சுமியாவை தொலைபேசியில் அழைத்துள்ளார் ஆனால் அவரது சகோதரர் சாகிர் அழைப்பை ஏற்று மிதுனை எச்சரித்துள்ளார். அதைத் தொடர்ந்து, மிதுனை சாகிர் மற்றும் அவரது வீட்டில் இருந்த மூன்று பேர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த மிதுனை பக்கத்து வீட்டுக்காரர் ராஜ்கோட் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், அங்கு அவருக்கு கடுமையான காயங்கள் மற்றும் மூளையில் ரத்தக்கசிவு இருப்பது கண்டறியப்பட்டது மற்றும் மேம்பட்ட சிகிச்சைக்காக அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டார்.
எனினும், தாக்கூர் புதன்கிழமை(மே 11) அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவன் இறந்த செய்தி சுமியாவுக்கு எட்டியதும் அவளும் தன் மணிக்கட்டை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். சுமியாவை மருத்துவமனைக்குக் கொண்டு வந்த பிறகு தான், காவல் துறையினருக்கு குற்ற சம்பவம் குறித்து தெரிய வந்ததுள்ளது.
பின்னர், "பாதிக்கப்பட்ட நபரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் சாகீர் மற்றும் அவரது கூட்டாளிகளில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தூக்கிட்டு தற்கொலை