ஆந்திரா: ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டம், பொதிலகுண்டபள்ளே கிராமத்தைச் சேர்ந்த 'மண்டல சக்கரதாரா வெங்கடசுப்பையா' என்பவர் செய்த சான்றிதழ் மோசடி ஒன்று 32 ஆண்டுகளுக்குப் பிறகு அம்பலமாகியுள்ளது. வெங்கடசுப்பையா பட்டியலினத்தைச் சேர்ந்தவர் அல்ல. ஆனால், கடந்த 1991ஆம் ஆண்டு தான் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று கூறி, போலியான ஆவணங்களை சமர்ப்பித்து சாதிச்சான்றிதழ் பெற்றுள்ளார். அதைப் பயன்படுத்தி ரயில்வேயில் வேலையும் வாங்கியுள்ளார்.
இவர் ரயில்வேயில் இத்தனை ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு தற்போது இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வெங்கடசுப்பையா தனது குழந்தைகளுக்கும் போலியான சாதிச்சான்றிதழை வாங்கியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெங்கட சுப்பையா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல், முறையாக சரிபார்க்காமல் சாதிச்சான்றிதழ் வழங்கிய தாசில்தார், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் 15 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 'நிமிர்ந்து நில்' திரைப்படத்தில் வருவதுபோல அலட்சியமாக செயல்பட்ட அரசு அலுவலர்கள் கும்பலாக சிக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் பத்திரிகையாளர்கள் எனக் கூறி கஞ்சா விற்ற இருவர் கைது!