ETV Bharat / bharat

புதுச்சேரியில் கரோனாவால் ஒருவர் உயிரிழப்பு.. மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட உறவினர்களால் பரபரப்பு! - மாவட்ட ஆட்சியர் வல்லவன்

COVID-19 death in Puducherry: புதுச்சேரியில் கரோனாவால் உயிரிழந்தவரின் உடலை தரக்கோரி மாவட்ட ஆட்சியரை காருடன் முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரோனாவால் உயிரிழந்தவரின் உடலை தரக்கோரி உறவினர்கள் போராட்டம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 27, 2023, 5:23 PM IST

கரோனாவால் உயிரிழந்தவரின் உடலை தரக்கோரி உறவினர்கள் போராட்டம்

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதி, நேரு நகரைச் சேர்ந்த கோவிந்து (55) என்பவர், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இன்று (டிச.27) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் கரோனாவில் இறந்ததாக கூறப்பட்டதால், அவரது உடலை உறவினரிடம் மருத்துவமனை ஒப்படைக்கவில்லை.

இதனால் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில், உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இறந்தவரின் உடலை வழங்க வேண்டும் அல்லது கரோனா வழிமுறையின்படி இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என கோரி, மாவட்ட ஆட்சியர் வல்லவனை காருடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் புதுச்சேரி - வழுதாவூர் சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலுவை மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு கேட்டபோது, கோவிந்து கரோனா பாதிப்பு காரணமாக இறந்ததாக சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீ ராமுலு உறுதிபடுத்தி உள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன் காசநோய் காரணமாக கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிந்துக்கு, இரண்டு நாட்களுக்கு முன் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில் இன்று (டிச.27) காலை 7 மணிக்கு உயிரிழந்தார்.

கரோனா காரணமாக அவர் உயிரிழந்ததால் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாது. நேரடியாக சுடுகாட்டிற்கு அனுப்பப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின், போராட்டம் கைவிடப்பட்டது. இதனை அடுத்து கோவிந்துவின் உடல், நேரடியாக கருவடிக்குப்பம் சுடுகாட்டிற்கு அனுப்பி கரோனா விதிமுறைப்படி இறுதிச்சடங்கு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே கோவிந்துவிற்கு எந்த மாதிரியான கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறித்து அறிவதற்கு ரத்த மாதிரி பெங்களூருக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரி அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல் - கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.