ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தை சேர்ந்த பூக்யா கோபி ஏப். 12ஆம் தேதி முத்தியாளம்மா பண்டிகையை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அம்மனுக்கு கிடா வெட்டி படையல் வைத்தார். இதையடுத்து கோபியும், குடும்பத்தினரும் ஒன்றாக அமர்ந்து ஆட்டுக்கறி விருந்தில் கலந்துகொண்டனர். அப்போது, கோபியின் தொண்டையில் ஆட்டின் எலும்பு சிக்கியது. இதன்காரணமாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
உடனடியாக உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பண்டிகை நாளில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நடுவானத்தில் தீ - செல்ஃபோன் செய்த சம்பவம்; பயணிகளின் நிலை?