தார்வாட்: கர்நாடக மாநிலம், ஹூப்ளி விமான நிலைய பாதுகாப்புப் பிரிவில் இருந்த மாயா என்ற பெண் நாய், கடந்த 3 நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த நாயை மீட்க ரத்தம் தேவைப்பட்டது. அதனால், மேல் சிகிச்சைக்காக மாயா நேற்று(செப்.18) தார்வாட் வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
மாயாவுக்கு ரத்தம் தேவைப்படுவதை அறிந்த சோம்சேகர் என்பவர், தனது ஜெர்மன் ஷெப்பர்டு செல்லப்பிராணியான சார்லியின் ரத்தத்தை தானம் செய்ய முன்வந்தார். சார்லியை அழைத்து வந்து, ஒரு யூனிட் ரத்தத்தை தானமாக வழங்கினார்.
அதை வைத்து மாயாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாயாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், விமான நிலைய ஊழியர்கள் மாயாவை ஹூப்ளிக்கு அழைத்துச்சென்றனர்.
இதையும் படிங்க: 56 இஞ்ச் மோடி ஜீ சாப்பாடு - 40 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.8.5 லட்சம் பரிசு