எர்ணாகுளம்: கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் பெரும்பாவூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பிளைவுட் நிறுவனத்தில், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் வேலை பார்த்து வந்தார். அவர் தனது நான்கு வயது பெண் குழந்தையையும் பணிபுரியும் இடத்திற்கு அழைத்துச்சென்றதாக தெரிகிறது.
அவர் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராத விதமாக அங்கிருந்த குப்பைக்குழியில் விழுந்துவிட்டது. இதைக் கண்ட ஊழியர்கள் உடனடியாக குழந்தையை மீட்டனர். ஆனால், குழந்தை இறந்துவிட்டது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று குழந்தையை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்நிறுவன அதிகாரிகள் குப்பைக்குழியை முறையாக பராமரிக்காததால் இந்தச் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பிளைவுட் நிறுவனத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தனியார் கல் குவாரியிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு!