போரிவலி (மும்பை ): மும்பையின் போரிவலி பகுதியில் சாய்பாபா கோயில் அருகே வெள்ளிக்கிழமை மதியம் 12:30 மணியளவில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது.
கீதாஞ்சலி வளாகத்தில் உள்ள ஏ விங் கட்டடம் சில நொடிகளில் இடிந்து விழுந்தது. கீதாஞ்சலி வளாகத்தில் மொத்தம் 4 கட்டடங்கள் உள்ளன, இவை அனைத்தும் 2020ஆம் ஆண்டிலேயே BMCஆல் C1 எனும் விபத்துக்குரிய வகையாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மக்கள் ஆபத்தான இந்த இடத்தில் இருந்து வெளியேறவில்லை. மேலும் BMC இன் முடிவை எதிர்த்து குடியிருப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த விவகாரம் உயர்நீதிமன்றத்தில் இருப்பதால், அங்கு வசிக்கும் மக்கள் மீது பிஎம்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் இன்று காலை வளாகத்தின் ஏ பிரிவில் அதிர்வு தெரிந்தது. உடனடியாக கட்டடத்தில் வசித்த குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர். அடுத்த இரண்டு மணி நேரத்தில் கட்டடம் இடிந்து விழுந்தது. மக்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், இந்த சம்பவத்திற்கு பிறகு காவல்துறை இந்த வளாகத்தில் மீதமுள்ள 3 கட்டடங்களில் வசிக்கும் 75 குடும்பங்களை உடனடியாக வெளியேற்ற உத்தரவிட்டது. இங்கிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: குஜராத்தில் கோடீஸ்வரர்களான தெரு நாய்கள்... வசிப்பிடமாக 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு