மும்பை: மகராஷ்டிரா மாநிலம் புனே அருகேயுள்ள பிரங்குட் எனும் பகுதியில் இயங்கிவரும் ரசாயனத் தொழிற்சாலையில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். தொழிற்சாலைக்குள் சில தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்குச் மூன்று தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.