ETV Bharat / bharat

"மித்துவும் அங்கிதாவும்" - நிஜமான 'ஹேப்பி பிரின்ஸ்' கதை.! - சிறுமி பறவை நட்பு

மேற்கு வங்கத்தில் ஒரு கிராமத்து சிறுமிக்கும் ஒரு பறவைக்கும் இடையே ஏற்பட்டுள்ள தூய்மையான அன்பு காண்போரை வியப்படையச் செய்கிறது. இவர்களது அன்பு, ஆஸ்கார் வைல்டின் 'தி ஹேப்பி பிரின்ஸ்' கதையை ஒத்திருக்கிறது.

Bird
Bird
author img

By

Published : Mar 15, 2023, 2:51 PM IST

ஹைதராபாத்: அயர்லாந்தைச் சேர்ந்த எழுத்தாளரும் கவிஞருமான ஆஸ்கார் வைல்டு 'தி ஹேப்பி பிரின்ஸ்' என்ற கதையை எழுதியுள்ளார். கடந்த 1888ஆம் ஆண்டு வெளியான இந்த கதையில், ஆஸ்கார் வைல்டு ஒரு சிலைக்கும் பறவைக்கும் இடையிலான தூய்மையான அன்பை பற்றி கூறியிருப்பார். இந்த 'தி ஹேப்பி பிரின்ஸ்' கதையைப் போலவே உண்மையான சம்பவம் ஒன்று மேற்குவங்க மாநிலத்தில் நடந்துள்ளது. இதில், ஒரு கிராமத்து சிறுமிக்கும் ஒரு ஸ்டார்லிங் பறவைக்கும் இடையே கள்ளம் கபடமில்லாத பிணைப்பு உள்ளது. இந்த விசித்திரமான அன்பு காண்போரை வியப்படையச் செய்கிறது.

மேற்குவங்க மாநிலத்தின் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள ஷிவ்பூர் தொடக்கப் பள்ளியில் அங்கிதா பாக்டி என்ற சிறுமி மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியை நீங்கள் பள்ளியில் பார்த்தால், அவளுடன் ஒரு சிறிய பறவை இருப்பதையும் பார்க்க முடியும். அங்கிதா அந்த பறவைக்கு மித்து என்று பெயர் வைத்தார். தினமும் அங்கிதா பள்ளிக்கு வந்து வகுப்பறையில் அமர்ந்ததும், மித்து உடனடியாக வந்து சிறுமியின் மேல் அமர்ந்து கொள்ளும்.

மித்து, கை தட்டினாலோ அல்லது சத்தம் போட்டாலோ பறந்துவிடும் சாதாரண பறவை அல்ல. பள்ளியில் மணி அடித்து மாணவர்கள் எழுந்து சென்றாலும், அது அங்கிதாவின் தலை மேலேயே அமர்ந்திருக்கும். வகுப்பு நடக்கும்போதும், அமைதியாக பாடங்களை கவனித்துக் கொண்டும், மாணவர்களை பார்த்துக் கொண்டும் இருக்கும். அதேபோல் உணவு இடைவேளையில் அங்கிதாவுடன் அமர்ந்து சாப்பிடும். அங்கிதாவின் தோழிகளுடனும் விளையாடும். சிறுமிகள் தரும் உணவுகளை சாப்பிடும். அங்கிதா கண்டுபிடித்த அவரது நண்பனான அந்த சிறிய பறவை பள்ளியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இதுகுறித்து சிறுமி அங்கிதா கூறும்போது, "மித்துவை நான் நேசிக்கிறேன், அதுவும் என்னை நேசிக்கிறது. மித்து தினமும் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வந்துவிடும். ஓரிரு நாட்கள் அது தாமதமாக வந்தால் நான் மிகவும் வருத்தப்படுவேன். சில நாட்களில் மித்து தனது மர வீட்டுக்குள் சென்றுவிடும்" என்று கூறினார்.

இதுகுறித்து பள்ளியின் பொறுப்பாளர் ராம்தாஸ் சோரன் கூறும்போது, "நான் இதற்கு முன் இதுபோன்ற நிகழ்வை பார்த்ததில்லை. அந்த சிறுமிக்கும் பறவைக்கும் இடையே உள்ள பிணைப்பைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கும். அது வேறு எங்கும் காணாத வித்தியாசமான நட்பு. மித்து எப்பொழுதும் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வந்து விடும். அங்கிதா வராத நாட்களில், மித்து அவளைப் பார்க்க அவளது வீட்டிற்கே பறந்து செல்லும்.

இவர்களது பிணைப்பைப் பார்க்கும்போது, அங்கிதாவுக்கு இந்த உலகில் இருக்கும் ஒரே ஒரு நண்பன் மித்துதான் என்பதுபோல தோன்றும். இவர்களது நட்பு சற்று விசித்திரமானதாக இருந்தாலும், எங்களுக்கும் அது பிடித்திருந்தது. அனைத்து மாணவர்களும் அந்த பறவையுடன் நட்பாக பழகினர். நாங்கள் அனைவரும் அதற்கு உணவு கொடுப்போம். அது எங்களுடன் இல்லாதபோது நாங்கள் சோகமாக உணர்கிறோம்" என்று கூறினார்.

அங்கிதா மீது மித்து காட்டும் அன்பைப் பார்த்த மற்ற மாணவர்களும், மித்துவுடன் நட்பாக பழக முயன்றனர். ஆனால், மித்து அங்கிதாவை விட்டு விலகவில்லை. ஒரு வேளை அந்த பறவை அங்கிதாவிடன் ஆத்மாத்மமான அன்பை உணர்ந்திருக்கலாம். நாளுக்கு நாள் வலிமையாகிக் கொண்டே போகும் இவர்களது உறவு, யாராலும் பிரிக்க முடியாத வகையில், அன்பு மற்றும் நம்பிக்கையில் பிணைக்கப்பட்டிருக்கிறது என்றே கூற வேண்டும்.

தி ஹேப்பி பிரின்ஸ் கதையில் வரும் பறவையும், சிலையையும் போலத்தான், அங்கிதாவும் மித்துவும். இவர்களது உறவை அனைவராலும் புரிந்து கொண்டுவிட முடியாது. இவர்களது பிணைப்பு, உண்மையான நட்புக்கும் தூய்மையான அன்புக்கும் சான்று. இவர்களது அன்புக் கடலைப் பார்த்து, மொத்த ஷிவ்பூரும் நெகிழ்ந்து கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: புக்கர் பரிசு பட்டியலில் 'பூக்குழி' தமிழுக்கு கிடைத்த பெருமை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.