திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலம் சில்சார் பகுதியைச் சேர்ந்த தம்பதி படல்தாஸ்-ஜெயாதாஸ். கர்ப்பமாக இருந்த ஜெயாதாஸ் ஜூன் 15ஆம் தேதி பிரசவத்திற்காக சதிந்திரா மோகன் தேவ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பொதுவாகக் கர்ப்பம் தரித்து 38 முதல் 42 வாரங்கள் வரையிலான காலங்களில் பெண்களைப் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வர்.
ஆனால் ஜெயாவிற்கு மருத்துவர்கள் குறிப்பிட்ட தேதியில் பிரசவம் நடைபெறவில்லை. ஆனால் அவருக்கு பிரசவ வலி ஏற்படவில்லை. இதனால் பிரசவத்திற்கு தாமதமாகவே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்தனர்.
அந்தக் குழந்தை 5.2 கிலோகிராம் எடை இருந்துள்ளது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் 2.5 கிலோகிராம் எடை இருக்கும்.
சில நேரங்களில் 4 கிலோ கிராம் வரை எடை இருந்திருக்கிறது. ஆனால் பிறந்த குழந்தை ஒன்று 5.2 கிலோகிராம் வரை எடை இருப்பது இதுவே முதன்முறை. மாநிலத்திலேயே அதிக எடையுடன் பிறந்த குழந்தை இதுதான்" என்று தெரிவித்தனர்.
ஜெயாவிற்கு இது இரண்டாவது குழந்தை. அவருக்குப் பிறந்த முதல் குழந்தை 3.8 கிலோகிராம் எடை இருந்துள்ளது.
இதையும் படிங்க; 2 வயது குழந்தையின் அசத்தல் நினைவாற்றல்!