ETV Bharat / bharat

மின்னல் தாக்குதல்: தொடர் உயிரிழப்புகளைச் சந்திக்கும் மேற்கு வங்கம் - மேற்கு வங்கம்

மேற்குவங்க மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் முரிஷிதாபாத் மாவட்டத்தில் ஆறு பேர், ஜாங்கிபூர் பகுதியில் ஒருவர், பெர்ஹாம்பூரில் இரண்டு பேர் என மொத்தம் 9 பேர் நேற்று (ஜுன் 7) உயிரிழந்துள்ளனர்.

முர்ஷிதாபாத், மேற்கு வங்கம், பெர்ஹாம்பூர்
ஒரே நாளில் மின்னல் தாக்குி 9 பேர் உயிரிழந்த துயரம்
author img

By

Published : Jun 8, 2021, 10:10 AM IST

முர்ஷிதாபாத் (மேற்கு வங்கம்): முர்ஷிதாபாத்தின் ரகுநாத்கஞ்ச் பகுதியில் சில விவசாயிகள் நேற்று (ஜுன் 7) பிற்பகல் வயலில் வேலை செய்துள்ளனர். அப்போது பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது. அதனால் அவர்கள் அனைவரும் ஒரு சிறிய அறையில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அறையில் அடித்த மின்னல்

திடீரென அந்த அறையில் மின்னல் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்தனர். எட்டு பேர் பலத்த பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் முர்ஷிதாபாத் மாவட்டம், மிர்சாபூர் கிராம பஞ்சாயத்தின் நவோடா கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

காவல் துறையினர் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்காவும், ஆறு பேரின் சடலங்களை பிரேத பரிசோதனை செய்வதற்கும் ஜாங்கிபூர் துணைப்பிரிவு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

உயிரிழந்தோர்

உயிரிழந்தவர்கள் சனிருல் இஸ்லாம் (25), சுனில் தாஸ் (35), துர்ஜாதான் தாஸ் (32), சூர்யா கர்மகர் (23), மஜாருல் ஷேக் (28), ஜலாலுதீன் ஷேக் (28) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மற்றொருவர்

இதற்கிடையில், ஜாங்கிபூர் பகுதியில் உள்ள சூடி காவல் நிலையத்தில் மின்னல் தாக்கியதால், மோரிஃப் ஷேக் என்பவரும் உயிரிழந்தார்.

பெர்ஹாம்பூரில் இரண்டு பேர்

இதையடுத்து, நேற்று பிற்பகல் பெர்ஹாம்பூர் பகுதியில் பலத்த இடியுடன் பெய்த மழையால், வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் கட்டுமானத்தில் உள்ள ஒரு வீட்டில் மூன்று பேர் ஒதுங்கியுள்ளனர்.

அந்த நேரத்தில், மின்னல் தாக்கியதால் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காவல் துறையினர் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்த மற்றொருவரை சிகிச்சைக்காகவும் முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இதையும் படிங்க: மருத்துவர்கள் மீதான வன்முறை- தலையிடுவாரா பிரதமர் மோடி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.