ETV Bharat / bharat

காவல்துறைக்கு ரூ.8,930 கோடி ஒதுக்கீடு - tn budget 2021

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில், காவல்துறைக்கு ரூ.8,930 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

tamilnadu police
tamilnadu police
author img

By

Published : Aug 13, 2021, 12:31 PM IST

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவருகிறது. இதில், 2021-22ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கை முதன்முறையாக அமைச்சராகி உள்ள (நிதி மற்றும் மனிதவள மேலாண்மை) பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துவருகிறார்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அதில், தமிழ்நாடு காவல்துறையை மேம்படுத்துவதற்காக ரூ.8,930.29 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவித்தார். இதுகுறித்து அவர், நாட்டின் மிகத் திறமையான காவல்துறையான, தமிழ்நாடு காவல்துறையின் தரத்தை மேம்படுத்தவும், மனிதவளம், வாகனங்கள், கருவிகள், ஆயுதங்கள், தளவாடங்கள், கட்டமைப்பு ஆகிய தேவைகளை பூர்த்தி செய்யவும், மொத்தமாக ரூ.8,930 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், காவல்துறையில் மீதமுள்ள 14,317 காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார். மேலும், பட்ஜெட் உரைக்கு முன்னதாக, அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாடு இ-பட்ஜெட் 2021-2022: செய்திகள் உடனுக்குடன்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.