ETV Bharat / bharat

பாஜக மாநிலத்தலைவரின் மனைவியிடம் 85 சவரன் தங்கநகைகள் மோசடி: நெருங்கிய தோழிக்கு போலீஸ் வலை - புதுச்சேரி லாஸ்பேட்டை

பாஜக மாநிலத்தலைவரின் மனைவியிடம் 85 சவரன் தங்கநகைகள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BJP state president
BJP state president
author img

By

Published : May 4, 2022, 10:35 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டை பெத்துசெட்டிபேட்டை புது தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவர் பாஜக மாநிலத் தலைவர் ஆவார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவரது பள்ளி காலத்தோழியும், வாணரப்பேட்டையை சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் பாபு என்பவரின் மனைவியுமான விஜயகுமாரி, குடும்பத்தில் ஒருவராக பழகியுள்ளார்.

விஜயலட்சுமியின் குடும்ப நிகழ்ச்சிகளை தானே முன்னின்று விஜயகுமாரி நடத்தி வந்ததால், அவர் மீது விஜயலட்சுமிக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இதனை சாதகமாகப்பயன்படுத்திய விஜயகுமாரி, தனது மகளின் படிப்பு செலவுக்காவும், அவசர தேவைக்காகவும் விஜயலட்சுமியிடம், கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை சிறிது சிறிதாக 100 சவரன் நகையை வாங்கியுள்ளார். இந்த நகைகளை விஜயகுமாரி புதுச்சேரியில் தனியார் நிதி நிறுவனத்தில் 9 பெயர்களில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார்.

பிறகு அந்த நகைகளை மீட்டு விஜயலட்சுமியிடம் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. இது விஜயலட்சுமியின் கணவரான சுவாமிநாதனுக்கும் தெரியாது.

இதனிடையே, விஜயலட்சுமியின் மகளுக்குத் திருமணம் ஏற்பாடாகியதால் நகைகளை திருப்பிக்கொடுக்குமாறு விஜயகுமாரியிடம் விஜயலட்சுமி கேட்டுள்ளார். ஆனால், நகைகளை திருப்பிக்கொடுக்காமல் விஜயகுமாரி காலம் கடத்தி வந்துள்ளார்.

15 சவரனை மட்டும் திரும்ப கொடுத்துவிட்டு, விஜயலட்சிமியின் தொடர்பை துண்டித்துள்ளார். இந்த நிலையில், விஜயகுமாரி தனது குடும்பத்தினருடன் திடீரென தலைமறைவானார். இதனால், நகை மோசடி செய்யப்பட்டதை அறிந்த விஜயலட்சுமி, லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவான விஜயகுமாரியை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: நீதிமன்றத்தில் தேதி முத்திரையைத் திருடிய முன்னாள் உதவியாளர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.