ETV Bharat / bharat

மகாராஷ்டிரா வெள்ளம்: 82 பேர் உயிரிழப்பு, 59 பேர் மாயம் - மகாராஷ்டிரா வெள்ளம்

மகாராஷ்டிராவில் தொடர் மழை, நிலச்சரிவு காரணமாக 82 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன 59 பேரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.

மகாராஷ்டிரா வெள்ளம்:  82 பேர் உயிரிழப்பு,  59 பேர் மாயம்

author img

By

Published : Jul 25, 2021, 10:32 AM IST

மும்பை: மகாராஷ்டிராவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளனர்.

59 பேர் காணாமல்போன நிலையில், 90 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவின் ரத்னகிரி, ராய்காட், கோலாப்பூர் மாவட்டங்களில் அதிக அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் உத்தவ் தாக்ரே, ராய்காட் பகுதியில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டார்.

முதலமைச்சர் உத்தவ் தாக்ரே ராய்காட் பகுதியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்.
முதலமைச்சர் உத்தவ் தாக்ரே ராய்காட் பகுதியில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உதவிகள்

கடந்த வியாழக்கிழமை (ஜூலை 22) ராய்காட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது. மழைக்காலங்களில் அதிக நிலச்சரிவு ஏற்படுவதால் மலைப்பகுதியில் வசிக்கும் மக்களை நிரந்தரமாக வெளியேற்றி வேறு பகுதிக்கு மாற்றும் வகையில் அரசு புதிய திட்டத்தைக் கொண்டு வரயிருக்கிறது என்றார், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்றும் அவர் கூறினார். இந்நிலையில் ரத்னகிரி மாவட்டம் சிப்லூன் பகுதியை இன்று (ஜூலை 25) அவர் பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

82 பேர் உயிரிழப்பு,  59 பேர் மாயம்
82 பேர் உயிரிழப்பு, 59 பேர் மாயம்

குடியரசுத் தலைவர் கேட்டறிந்தார்

வெள்ளப் பாதிப்புகள் குறித்து மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யரியைத் தொடர்பு கொண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார். அப்போது அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மீட்புப் பணி

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், கடலோர காவல் படையினருடன் இணைந்து 14 குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் நான்கு மாநில பேரிடர் மீட்புப் குழுவும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்புக் குழுக்கள் மூலம் உணவு வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க: மும்பையில் நிலச்சரிவு: 36 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.